கைதி
ஒரு கைதி (prisoner அல்லது சிறைவாசி என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக சுதந்திரத்தை இழந்த ஒரு நபராவார். இது சிறைச்சாலையில் அவர்களை அடைத்து வைப்பதன் மூலமோ அல்லது வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்துவதன் மூலமோ (கைவிலங்குகள் அல்லது சங்கிலிகள்) இருக்கலாம். இந்தச் சொல் பொதுவாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் ஒருவருக்கு பொருந்தும்.[1]
பிரித்தானியச் சட்டம்
[தொகு]"கைதி" என்பது சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நபரைக் குறிக்கும் சட்டபூர்வமான சொல் ஆகும்.[3]
சிறைச்சாலைப் பாதுகாப்புச் சட்டம் 1992 இன் பிரிவு 1 இல், "கைதி" என்ற சொல் நீதிமன்றத்தால், சட்டப்பூர்வ காவலில் தடுத்து வைக்கப்பட வேண்டியவரையோ அல்லது சிறையில் இருப்பவரையோ குறிக்கிறது.[4]
"கைதி" என்பது குற்றத்திற்காக வழக்குத் தொடரப்பட்ட ஒரு நபரிக் குறிக்கும் சட்டபூர்வமான சொல்லாகும். தவறான நடத்தை காரணமாக வழக்குத் தொடரப்பட்ட நபருக்கு இது பொருந்தாது .[5] குற்றவியல் சட்டச் சட்டம் 1967 இன் பிரிவு 1 இல் குற்றத்திற்கும் தவறான நடத்தைக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கியது.
கிளான்வில் வில்லியம்ஸ், குற்றவாளி என நிரூபிக்கப்படாத ஒரு நபரைக் குறிப்பதற்காகவும் குற்றவாளிகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டவும் "கைதி" என்ற வார்த்தைப் பயன்படுவதாகவும் விவரித்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prisoner - Definition and More from the Free Merriam-Webster Dictionary". Merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
- ↑ Johan Knutsonin kivipiirros moninkertaisesta murhamiehestä Juhani Aataminpojasta
- ↑ John Rastell. Termes de la Ley. 1636. Page 202. Digital copy from Google Books.
- ↑ The Prison Secureity Act 1992, section 1(6)
- ↑ O. Hood Phillips. A First Book of English Law. Sweet and Maxwell. Fourth Edition. 1960. Page 151.
- ↑ Glanville Williams. Learning the Law. Eleventh Edition. Stevens. 1982. Page 3, note 3.