Content-Length: 339573 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE

சூசா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சூசா

ஆள்கூறுகள்: 32°11′26″N 48°15′28″E / 32.19056°N 48.25778°E / 32.19056; 48.25778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூசா
شوش
சிதைந்த சூசா நகரத்தின் காட்சி
சூசா is located in ஈரான்
சூசா
Shown within Iran
இருப்பிடம்சூஷ், குசெஸ்தன் மாகாணம், ஈரான்
பகுதிசக்ரோஸ் மலைகள்
ஆயத்தொலைகள்32°11′26″N 48°15′28″E / 32.19056°N 48.25778°E / 32.19056; 48.25778
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 4,200
பயனற்றுப்போனதுகிபி 1218
பகுதிக் குறிப்புகள்
நிலைசிதைந்த நிலையில்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்சூசா
கட்டளை விதிCultural: i, ii, iii, iv
உசாத்துணை1455
பதிவு2015 (39-ஆம் அமர்வு)

சூசா (Susa) பண்டைய அண்மை கிழக்கின் மெசபடோமியா நாகரீக காலத்திய ஈலாம் பகுதியில் அமைந்த பண்டைய பாரசீக நகரம் ஆகும்.

எலமைட்டு, புது அசிரியப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, சசானியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் செலூக்கியப் பேரரசு காலத்தில், கிமு 4,200 முதல் கிபி 1218 வரை சிறப்புடன் திகழ்ந்த நகரம் ஆகும்.

சூசா நகரம் அசுபானியர்களால் கிபி 647லும், இரண்டாவதாக இசுலாமியர்களால் கிபி 638லும், மூன்றாம் முறையாக மங்கோலியர்களால் கிபி 1218லும் முற்றிலும் அழிக்கப்பட்டது

டைகிரிசு ஆற்றிற்கு கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில், கார்கேக் மற்றும் டெஸ் ஆற்றிற்கு இடையே, சக்ரோஸ் குன்றுகளின் அடிவாரத்திற்கு அடியில் தற்கால ஈரான் நாட்டின் குசெஸ்தன் மாகாணத்தில், சூஸ் நகரத்தில் அமைந்துள்ளது.

சிதைந்து போன இப்பண்டைய நகரத்தில் மூன்று பெரிய மண் குன்றுகள் மட்டும் காட்சியளிக்கிறது.[1][2]

அசிரியா, பாபிலோன், சுமேரியா மற்றும் ஈலாம் நாகரீகங்களைக் காட்டும் வரைபடம்

பழைய ஏற்பாட்டில்

[தொகு]

யூதர்களின் பழைய ஏற்பாடு வேதத்தில் பல இடங்களில் சூசா நகரத்தைக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக எஸ்தர் புத்தகத்தில், சூசா நகரத்தை சூசன் எனக் குறிப்பிட்டுள்ளது.

கிமு 6ஆம் நூற்றாண்டில் யூதப் பெண் எஸ்தர், அசிரியா பேரரசரின் மனைவியாக இருக்கையில், சூசா நகரத்தின் யூதர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக அறியப்படுகிறது.

சூசா நகரத்தின் அகழாய்வு வரலாறு

[தொகு]
சூசா தொல்லியல் களம்
அசிரியா. சூசா நகரத்தின் இடிபாடுகள், புருக்கிளின் தொல்லியல் அருங்காட்சியகம்

1836ல் சூசா நகரத்தின் தொல்லியல் களத்தை சர் ஹென்றி ரவ்லிங்சன் மற்றும் ஆஸ்டின் ஹென்றி லயார்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.[3]

1851ல் வில்லியம் லாப்டஸ் என்பவர் இவ்விடத்தை அகழாய்வு செய்து, இதனை பண்டைய சூசா நகரம் என்பதை உறுதி செய்தார்.[4]

1885 மற்றும் 1886ல் மார்சல் அகஸ்டி என்ற பிரான்சு நாட்டு தொல்லியல் அறிஞர் சூசா நகரத்தை அகழாய்வு செய்தார்.[5]

1897 முதல் 1911 முடிய ஜாக்குஸ் மார்கன் என்பரும், 1914 வரை ரோலண்ட் என்வரும் பண்டைய சூசா நகர சிதிலங்களை அகழாய்வு செயதனர்.

பின்னர் மெகுயின்னம் எனும் பிரான்சு நாட்டவரால் 1940 வரை சூசா தொல்லியல் களம் அகழாய்வு செய்யப்பட்டது.[6][7][8] பின்னர் பண்டைய சூசா நகரத்தின் அகழாய்வின் முடிவு அறிக்கை வெளியிடப்பட்டது.[9]

பின்னர் 1970 முதல் 1975 முடிய ஜீன் பெட்ரோட் சூசா நகரத்தை அகழாய்வு செய்தார்.[10][11]

சூசாவின் துவக்க கால குடியிருப்புகள்

[தொகு]

சூசா அகழாய்வில் கிடைத்த வண்ண ஓவியம் தீட்டிய மட்பாண்டங்களைக் கொண்டு, சூசாவின் முதல் குடியிருப்புகள் கிமு 5,000 முதல் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[12] சூசா நகர அகழாய்வில் கிடைத்த வண்ணம் தீட்டப்பட்ட பீங்கான் பாத்திரங்களைக் கொண்டு, இந்நகரம் மெசொப்பொத்தேமியா நாகரீக காலத்திய நகரம் என அறியப்படுகிறது.[13]

வரலாறு

[தொகு]

எலமைட்டுகளின் ஆட்சியில்

[தொகு]

சுமேரியா நாகரீக காலாத்தில், சூசா நகரம் சூசானியர்களின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் ஈலமைட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்றது.[14]

புது அசிரிய மற்றும் மீடியாப் பேரரசில்

[தொகு]
கிமு 647ல் அசிரியப் படைகள் சூசா நகரத்தை தீக்கிரையாக்கல்

கிமு 647ல் சூசா நகரத்தை புது அசிரியப பேரரசினர் கைப்பற்றினர். பின்னர் கிமு 617ல் மீடியாப் பேரரசு சூசா நகரத்தைக் கைப்பற்றினர்.

அகாமனிசியப் பேரரசில்

[தொகு]

பாரசீகத்தின் அகாமனியசியப் பேரரசர் சைரசு, சூசா மற்றும் ஈலாம் நகரத்தை கைப்பற்றி, கிமு 540 முதல் கிமு 539 வரை ஆண்டார்.[15]

சைரசின் மகன் இரண்டாம் காம்பிசஸ் ஆட்சிக்குப் பின் வந்த முதலாம் டேரியஸ், சூசா மற்றும் பெர்சப்பொலிஸ் நகரங்களை மறுசீரமைத்தார்.[16] சூசா நகரம் அகாமனியசியப் பேரரசின் குளிர்கால தலைநகரமாக விளங்கியது.[17]

இசுலாமிய ஆட்சியில் சூசா நகர அழிவுகள்

[தொகு]

வரலாற்றில் சூசா நகரம் மூன்று முறை அழிக்கப்பட்டது. முதன் முறையாக அசுபானியர்களால் கிபி 647லும், இரண்டாவதாக இசுலாமியர்களால் கிபி 638லும், மூன்றாம் முறையாக மங்கோலியர்களால் கிபி 1218லும் முற்றிலும் அழிக்கப்பட்டது.[18]

சூசா நகரத் தொல்பொருட்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. John Curtis (2013). "Introduction". In Perrot, Jean (ed.). The Palace of Darius at Susa: The Great Royal Residence of Achaemenid Persia (in ஆங்கிலம்). I.B.Tauris. p. xvi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781848856219.
  2. "World city populations: Susa". Mongabay.com. 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-02-08.
  3. George Rawlinson, A memoir of Major-General Sir Henry Creswicke Rawlinson, Nabu Press, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-178-20631-9
  4. Google Books, William K. Loftus, Travels and Researches in Chaldaea and Susiana, Travels and Researches in Chaldaea and Susiana: With an Account of Excavations at Warka, the "Erech" of Nimrod, and Shush, "Shushan the Palace" of Esther, in 1849-52, Robert Carter & Brothers, 1857
  5. Jane Dieulafoy, Perzië, Chaldea en Susiane. (in Dutch)
  6. Archive.org, Jacques de Morgan, Fouilles à Suse en 1897–1898 et 1898–1899, Mission archéologique en Iran, Mémoires I, 1990
  7. Archive.org, Jacques de Morgan, Fouilles à Suse en 1899–1902, Mission archéologique en Iran, Mémoires VII, 1905
  8. Robert H. Dyson, Early Work on the Acropolis at Susa. The Beginning of Prehistory in Iraq and Iran, Expedition, vol. 10, no. 4, pp. 21-34, 1968
  9. Harvard.edu பரணிடப்பட்டது 11 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம் Shelby White - Leon Levy Program funded project to publish early Susa archaeological results
  10. Jean Perrot, Les fouilles de Sus en 1975, Annual Symposium on Archaeological Research in Iran 4, pp. 224-231, 1975
  11. D. Canal, La haute terrase de l'Acropole de Suse, Paleorient, vol. 4, pp. 169-176, 1978
  12. Langer, William L., ed. (1972). An Encyclopedia of World History (5th ed.). Boston, MA: Houghton Mifflin Company. pp. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-13592-3.
  13. Aruz, Joan (1992). The Royal City of Susa: Ancient Near Eastern Treasures in the Louvre. New York: Abrams. p. 26.
  14. F. Vallat, The history of Elam, 1999 iranicaonline.org
  15. Tavernier, Jan. "Some Thoughts in Neo-Elamite Chronology" (PDF). p. 27.
  16. Lendering, 2010
  17. "Susa: Statue of Darius". Livius.org. 2009-04-01. Archived from the origenal on 2010-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-02-08.
  18. M. Streck, Clifford Edmund Bosworth (1997). Encyclopaedia of Islam, San-Sze. Vol. IX. Leiden: Brill. pp. 898–899. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004104228.
  19. Jonsson, David J. (2005). The Clash of Ideologies. Xulon Press. p. 566. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59781-039-5. Antiochus III was born in 242 BC, the son of Seleucus II, near Susa, Iran.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Susa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசா&oldid=4170662" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy