நூல் (இழை)
நூல் என்பது நீண்ட தொடர்ச்சியாக ஒன்றோடொன்று பிணைத்து இறுக்கப்பட்ட இழைகளாகும். இது நெசவு, தையல் மற்றும் ஆடைகள் உற்பத்திக்கு பயன்படுகிறது. பஞ்சு, கம்பளி போன்ற இயற்கைப் பொருட்களாலும், நெகிழி, செயற்கை இழை போன்ற செயற்கைப் பொருட்களாலும் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன.
தொல்காப்பியம் நூல் என்னும் சொல்லைக் குறிப்பிடுகிறது. அந்தணர்,முனிவர் போன்றோர் பல இடங்களுக்கும் செல்லக்கூடியவர்கள். அவர்கள் எப்போதும் சிறுபானையை நீர் எடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்துவர். அப்பானையை வைத்துச் கொள்வதற்கு வசதியாக நூலால் செய்த உறியைப் பயன்படுத்துவர்.எனவே இங்கு நூல்,கரகம்,முக்கோல்,மணை போன்ற பொருட்கள் அனைத்தும் கையில் வைத்து எடுத்துச் செல்லக்கூடியவையாகவே இருப்பதை கவனிக்க வேண்டும். இந்த நூல் என்பதை சில உரையாசிரியர்கள் தவறாக பூணூல் எனக் குறிப்பிடுகின்றனர். தோளில் அணியும் பூணூலை கையில் எதற்காக முனிவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் எனச் சிந்தித்தால் இந்த நூல் என்பது உறி நூல் என்பது புலப்படும். [1]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. (தொல்காப்பியம்,3-615)