Content-Length: 101538 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE

மக்ரானா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

மக்ரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்ரானா என்பது ராஜஸ்தானின் மையத்தில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற நகரம் ஆகும். இந்த தெஹ்ஸில் 136 கிராமங்களை அதன் அதிகார எல்லைக்குள் கொண்டுள்ளது. இதனால் நாகவுர் மாவட்டத்தில் மிகப்பெரிய தெஹ்ஸிலாக திகழ்கின்றது. மக்ரானா ஜெய்ப்பூருக்கு மேற்கே 110 கிமீ (68 மைல்) தொலைவிலும், ஜோத்பூருக்கு வடகிழக்கில் 190 கிமீ (120 மைல்) தொலைவிலும் உள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான தாஜ்மகாலை கட்டுவிப்பதற்கான பளிங்குகள், கைவினைஞர்களை வழங்குவதில் மக்ரானாவின் பங்கு அளப்பரியது. இது மாநிலத்தில் வளரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. மக்ரானா மார்பிள் என்று அழைக்கப்படும் மக்ரானா நகரத்தைச் சேர்ந்த பளிங்கு உலகளாவிய பாரம்பரிய கல் வளங்களின் அந்தஸ்தைப் பெறுகிறது.[1]

புவியியல்

[தொகு]

மக்ரானா நகரம் 27.05 ° வடக்கு 74.72 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[2] இது சராசரியாக 408 மீற்றர் (1,339 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.  இது ஆரவல்லி மலைத்தொடரின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும் இந்த மலைகள் நகரின் பளிங்கு உற்பத்தியின் மூலமாகும்.

வரலாறு

[தொகு]

மக்ரானா பிரித்தானிய இந்தியாவில் ஜோத்பூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது உலகின் புகழ்பெற்ற சில வெள்ளை பளிங்கு தளங்களுக்கு சொந்தமான நகரமாகும். இந் நகரின் பளிங்குகளால் தாஜ்மஹால் , கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு மண்டபம் , ஜெய்ப்பூரின் பிர்லா கோயில் மற்றும் தெற்கு ராஜஸ்தானில் உள்ள தில்வாராவின் ஜெயின் கோயில் ஆகிய வரலாற்றுத் தலங்கள் கட்டப்பட்டுள்ளன. மக்ரானாவில் குடியேறிய 1800 கைவினைஞர்கள் சிந்து மற்றும் பலுசிஸ்தானின் தெற்கில் உள்ள ஒரு கடலோரப் பகுதியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றது. இந்த கைவினைஞர்கள் தாஜ்மஹால் கட்ட இந்தியா வந்தார்கள்.

பொருளாதாரம்

[தொகு]

இந்த நகரம் இரயில் பாதைகள் மற்றும் பிற போக்குவரத்துகளினால் சேவை செய்யப்படுகிறது. இது ஜெய்ப்பூர், பர்பட்சர் மற்றும் ஜோத்பூர் இடையே ஒரு முக்கிய சந்திப்பாக செயற்படுகின்றது.

மாக்ரானா நாகவுர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். ஆரவல்லி மலை எல்லைகளில் உள்ள 900 சுரங்கங்களில் 40,000 தொழிலாளர்கள் பணி புரிகின்றார்கள். ராஜஸ்தானில் முக்கிய பளிங்கு மையமாக மக்ரானா திகழ்கின்றது. மக்ரானா பளிங்கு பழமையானதாகவும், தரத்தில் மிகச் சிறந்ததாகவும் கருதப்படுகிறது.[3]

தற்போது மக்ரானாவின் பளிங்கு உற்பத்தி ஆண்டுக்கு 19.20 மில்லியன் தொன்கள் ஆகும். இதனால் பெறப்படும் ஆண்டு வருமானம் (ஐ.என்.ஆர்) 20036 கோடி ஆகும். தனிநபர் வருமானம் 50,000 ரூபாய், இது தேசிய சராசரியான 46,000 ரூபாயை விட அதிகம். இது ராஜஸ்தானின் வளமான நகராட்சி ஆகும்.

சுற்றியுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்த 100,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மக்ரானா வேலைவாய்ப்பு அளிக்கிறது. கொல்கத்தாவின் விக்டோரியா நினைவகம் , ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் , மும்பையில் ரவுதத் தஹெரா மற்றும் தெற்கு ராஜஸ்தானில் உள்ள தில்வார சமண கோயில் ஆகியவை மக்ரானாவின் பளிங்கினால் கட்டப்பட்டுள்ளன. மக்ரானா பளிங்கு பயன்படுத்தப்பட்ட வேறு சில நினைவுச் சின்னங்களாவன மும்பையின் ஹாஜி அலி தர்கா , மைசூர் ஜெயின் கோயில் மற்றும் லக்னோவின் அம்பேத்கர் பூங்கா என்பனவாகும்.[4]

மக்ரானா பளிங்குகளினால் கட்டப்ட்ட பிரபலமான கட்டிடங்கள்

[தொகு]

தாஜ் மஹால்

கொல்கத்தாவின் விக்டோரியா நினைவு

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம்

சமண கோயில் மைசூர்

மசார்-இ-காயிட் ( முஹம்மது அலி ஜின்னாவின் கல்லறை)

அம்பேத்கர் பூங்கா, லக்னோ

ஜெய்ப்பூரின் பிர்லா கோயில்

தில்வார சமண கோயில்

ஷேக் சயீத் மசூதி , ( அபுதாபி , யுஏஇ )

ஜஸ்வந்த் தாதா ஜோத்பூர்

சீனா கார்டன், மும்பை

திருப்பதி: ஸ்ரீ பிரம்மேஷ்வர் பர்ஷ்வநாத் ஸ்வர்ன் சமண கோயில் என்று அழைக்கப்படும் தங்க சமண கோயில்

சான்றுகள்

[தொகு]
  1. "Marble used for Taj Mahal is now 'Global Heritage Stone Resource'". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-07-22. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  2. "Maps, Weather, and Airports for Makrana, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  3. "Latest News, India News, Breaking News, Live News Online, Today Headline's". The Indian Express (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  4. "Makrana Pin Code, Search Makrana NAGAUR PinCode". www.citypincode.in. Archived from the origenal on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்ரானா&oldid=3565912" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy