விக்கிப்பீடியா:விபரம்
இந்த விக்கிப்பீடியா பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த விக்கிப்பீடியா பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
தமிழ் விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.ஆர்வமுள்ள எவரும் இதனைப் பயன்படுத்தவும், இதில் பங்களிக்கவும் இயலும்.பசிபிக் பெருங்கடலில் உள்ள அவாயித் தீவினரின், அவாயி மொழியில் விக்கி என்றால் விரைவாக, கிடுகிடு என்று, சட்டுசட்டென்று பொருள். இதனடிப்படையில் விரைந்து உருவாகும் கலைக்களஞ்சியம் என்னும் பொருளில் விக்கிப்பீடியா என்று அழைக்கப்படுகின்றது. இன்று விக்கி என்பது பலரும் கூட்டாக எழுதுவதை ஏற்கும் மென்பொருள் கொண்டு இயங்கும் வலைத்தளம் அல்லது மென்பொருள் என்றும் பொருள். இதன் மூல மென்பொருள் மீடியாவிக்கி என்று அழைக்கப்படுகிறது. இது இணையத்தில் உள்ள எவரும், எங்கிருந்தாலும், எந்தப் பக்கத்தையும் எளிதில் "தொகு" என்னும் பிரிவுசுட்டியை (tab) சொடுக்குவதன் மூலம் மாற்ற முடியும். அச்சுக் கலைக்களஞ்சியங்கள் போலன்றி இணையத்தில் அனைவரின் அணுக்கத்தில் உள்ளதால் எப்போதும் உடனுக்குடன் புதிய தரவுகளோடு இற்றைப் படுத்தியபடியே (update செய்தபடியே) இருக்கும்.
திட்டத்தின் வரலாறும் மேலாய்வும்
ஆங்கில விக்கிப்பீடியாவை சனவரி,2001 ஆம் ஆண்டு ஜிம்மி வேல்சும், லாரி சாங்கரும் தொடங்கினார்கள். இன்று விக்கிப்பீடியா 260-க்கும் மேலானான மொழிகளில் மொத்தமாக 9,000,000 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழில் உள்ள 1,68,914 கட்டுரைகளும் இதில் அடக்கம். தமிழ் விக்கியை 2003 ஆம் ஆண்டு இ. மயூரநாதன் துவங்கினார். இப்பொழுது 16,000 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா 70 இலட்சம் சொற்கள் கொண்ட பல்துறை இணையக் கலைக்களஞ்சியம். இது நாள்தோறும் 80,000 முறை பார்க்கப்படுகின்றது. மாதத்துக்கு 2.4 மில்லியன் முறை பார்க்கப்படுகின்றது.
- விக்கிப்பீடியா திட்டமும் வரலாறும் மற்றும் FAQ
- விக்கிமீடியா நிறுவனம், இலாப நோக்கற்ற விக்கிப்பீடியா தாய் நிறுவனம்.
- விக்கிப்பீடியா அறிவித்தல்கள், ஊடக வெளியீடுகள், மற்றும் வார மீளாய்வு.
விக்கிபீடியாவில் உலாவுதல்
- அண்மைய மாற்றங்கள் — நிகழ்காலத்தில் கடைசி நிமிடங்களில் தொகுக்கப்படும் கட்டுரைகள்.
- சிறப்புக் கட்டுரைகள், புதிய பக்கங்கள், அல்லது ஏதாவது ஒரு கட்டுரை.
- தமிழ் விக்கிப்பீடியாவின் உசாத்துணைப் பக்கம் —உதவிக்கும் ஆய்வு தகவலுக்கும்.
ஊடக வினவல்கள்
விக்கிப்பீடியாவுக்கு பங்களித்தல்
நீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம். உங்களை தமிழ்விக்கிபீடியாவில் இணைய தமிழ் விக்கிபீடியா சமூகம் அன்புடன் வரவேற்கின்றது.
உசாத்துணைகள்: பங்களிப்பாளர்களுக்கு கொள்கைகளும் வழிகாட்டல்களும், புது வாசகர் (பயனர்) பக்கம், புதியவர்களுக்கான அறிமுகம், மற்றும் பொதுவான உதவி ஆகியன பங்களிக்கவும் தொகுக்கவும் உலாவவும் வழிகாட்டுகின்றன.
பிற மொழி பதிப்புகள்
- 1000,000 கட்டுரைகளுக்கு மேல் உள்ள பிற மொழி விக்கிப்பீடியாக்கள்:Deutsch (German) · English (English) · Français (French) · Nederlands (Dutch)
- 100,000 கட்டுரைகளுக்கு மேல் உள்ள பிற மொழி விக்கிப்பீடியாக்கள்: العربية (Arabic) · Български (Bulgarian) · Català (Catalan) · Česká (Czech) · Dansk (Danish) · Esperanto · Español (Spanish) · Eesti (Estonian) · Euskara (Basque) · فارسی (Persian) · Suomi (Finnish) · עברית (Hebrew) · हिन्दी (Hindi) · Hrvatski (Croatian) · Magyar (Hungarian)
- Bahasa Indonesia (Indonesian) · Italiano (Italian) · 日本語 (Japanese) · Қазақша (Kazakh) ·한국어 (Korean) · Lietuvių (Lithuanian) · Bahasa Melayu (Malay) · Norsk (Norwegian) · Polski (Polish) · Português (Portuguese) · Română (Romanian) · Русский (Russian) · Slovenčina (Slovak) · Slovenščina (Slovenian) · Svenska (Swedish) · Српски (Serbian) · Українська (Ukrainian) - · Tiếng Việt (Vietnamese) · 中文 (Chinese)
- 10,000 கட்டுரைகளுக்கு மேல் உள்ள பிற மொழி விக்கிப்பீடியாக்கள்: Afrikaans · Беларуская (Belarusian) - मराठी (Marathi) - Simple English · ภาษาไทย (Thai)
- 1,000 கட்டுரைகளுக்கு மேல் உள்ள பிற மொழி விக்கிப்பீடியாக்கள்: Asturianu (Asturian) · Bosanski (Bosnian) · Cymraeg (Welsh) · Ελληνικά (Greek) Frysk (Western Frisian) · Gaeilge (Irish) · Gàidhlig (Scots Gaelic) · Galego (Galician) · · Interlingua · Ido · Íslenska (Icelandic) · Basa Jawa (Javanese) · ქართული (Georgian) · Kurdî / كوردی (Kurdish) · Latina (Latin) · Lëtzebuergesch (Luxembourgish) · Latviešu (Latvian) · Plattdüütsch (Low Saxon) · Nynorsk · Ирон (Ossetic) · संस्कृतम् (Sanskrit) · Sicilianu (Sicilian) · Shqip (Albanian) · Tagalog · Türkçe (Turkish) · Tatarça (Tatar) · Walon (Walloon) · Bân-lâm-gú (Min Nan)
முழு பட்டியல் · பன்மொழி ஒருங்கிணைப்பு · இன்னொரு மொழியில் விக்கிப்பீடியா தொடங்க
தமிழ் விக்கிப்பீடியாவின் பிற உறவுத்திட்டங்கள்
இத்தளத்தில் உள்ள கட்டுரைகளுக்கு கிரியேட்டிவ் காமன்ஸ் (Creative Commons) அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அனைத்து விக்கிப்பீடியாக் கட்டுரைகளையும் பயன்படுத்தவும் நகல் எடுப்பதற்கான உரிமையையும் உறுதி செய்கிறது.(மேலும் விவரங்களுக்கு விக்கிப்பீடியா பதிப்புரிமை மற்றும் பொறுப்புத் துறப்புகள் பக்கங்களைப் பார்க்கவும்)