1937
1937 (MCMXXXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 31 - சோவியத் ஒன்றியத்தில் 31 திரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- மார்ச் 15 - உலகின் முதல் இரத்த வங்கி துவங்கப்பட்டது.
- மார்ச் 18 - ஐக்கிய அமெரிக்கா, டெக்ஸாசில் நியூ லண்டன் பாடசாலையில் இடம்பெற்ற இயற்கை வாயு வெடிப்பில் 300 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 7 - ஜப்பானியப் படையினர் சீனாவினுள் நுழைந்தனர். இதுவே ஆசியாவில் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பமெனக் கருதப்படுகிறது.
- செப்டம்பர் 2 - ஹொங்கொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 11,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 27 - கடைசி பாலிப் புலி இறந்தது.
- நவம்பர் 9 - ஜப்பான் ஷாங்காய் நகரைக் கைப்பற்றியது.
- திசம்பர் 13 - 250,000 முதல் 300,000 வரையானோர் நாங்கிங் படுகொலைகள் நிகழ்வினால் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 13 - ரூப்பையா பண்டா, சாம்பிய அரசுத்தலைவர்
- மார்ச் 6 - வலண்டீனா தெரெசுக்கோவா, உருசிய விண்வெளி வீரர், விண்வெளிக்குச் சென்ற முதலாவது பெண்
- ஏப்ரல் 19 - ஜோசப் எஸ்திராடா, பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர்
- ஏப்ரல் 22 - ஜேக் நிக்கல்சன், அமெரிக்க நடிகர்
- ஏப்ரல் 28 - சதாம் உசேன், ஈராக்கிய குடியரசுத் தலைவர் (இ. 2006)
- மே 15 — மாடிலின் ஆல்பிரைட், அமெரிக்காவின் முதல் பெண் வெளிநாட்டமைச்சர் (இ. 2022)
- மே 21 - மெங்கிஸ்து ஹைலி மரியாம், எதியோப்பியாவின் முன்னாள் அரசுத்தலைவர்
- மே 26 - மனோரமா, தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 2015)
- சூன் 1 - மார்கன் ஃபிரீமன், அமெரிக்க நடிகர்
- சூன் 23 - மார்ட்டி ஆட்டிசாரி, பின்லாந்தின் அரசுத்தலைவர்
- சூலை 6 - மைக்கேல் சாட்டா, சாம்பிய அரசுத்தலைவர் (இ. 2014)
- நவம்பர் 11 - இசுரீபன் லூவிசு, கனடிய அரசியல்வாதி
- நவம்பர் 11 - ப. ஆப்டீன், இலங்கையின் மலையக எழுத்தாளர் (இ. 2015)
- டிசம்பர் 28 - ரத்தன் டாட்டா, இந்தியத் தொழிலதிபர்
- டிசம்பர் 29 - மாமூன் அப்துல் கயூம், மாலைத்தீவுகள் முன்னாள் அரசுத்தலைவர்
இறப்புகள்
தொகு- மார்ச் 15 - எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1890)
- ஏப்ரல் 27 - அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய அரசியல்வாதி (பி. 1891)
- மே 23 - ஜான் டி. ராக்பெல்லர், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1839)
- சூலை 2 - அமேலியா ஏர்ஃகாட், அமெரிக்க வானோட்டி (காணவில்லை) (பி. 1897)
- சூலை 20 - மார்க்கோனி, இத்தாலியக் கண்டுபிடிப்பாளர் (பி. 1874)
- செப்டம்பர் 2 - பியர் தெ குபர்த்தென், நவீன கால ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை (பி. 1863)
- அக்டோபர் 19 - எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்தவர் (பி. 1871)
- நவம்பர் 23 - ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய இயற்பியலாளர் (பி. 1858)
- டிசம்பர் 9 - நில்சு குஸ்டாப் டேலன், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (பி. 1869)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - கிளிண்டன் ஜோசப் டேவிசன், ஜார்ஜ் பஜெட் தாம்சன்
- வேதியியல் - வால்ட்டர் ஆவர்து, பவுல் காரர்
- மருத்துவம் - ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி
- இலக்கியம் - ராஜர் மார்ட்டின் டூ கார்டு
- அமைதி - ராபர்ட் செசில்