மிராபிலைட்டு
மிராபிலைட்டு Mirabilite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Na2SO4•10H2O |
இனங்காணல் | |
மோலார் நிறை | 322.9 கி/மோல் |
நிறம் | நிறமற்றது, வெண்மை, மஞ்சள் கலந்த வெண்மை, பச்சை கலந்த வெண்மை |
படிக இயல்பு | சிறுமணி அல்லது நன்கு உருவான கரடுமுரடான படிகங்கள் |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
இரட்டைப் படிகமுறல் | {001}, {100} இல் ஊள் ஊடுறுவல் இரட்டைப் படிகமுறல் ; |
பிளப்பு | {100} இல் தெளிவு, {001} இல் குறைவு, {010} இல் குறைவு |
முறிவு | சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 1.5–2 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், புகாது, கசியும் |
ஒப்படர்த்தி | 1.49 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (–), 2V=75.93° |
ஒளிவிலகல் எண் | nα = 1.396, nβ = 1.4103, nγ = 1.419 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.023 |
பலதிசை வண்ணப்படிகமை | இல்லை |
பிற சிறப்பியல்புகள் | ஒளிராது, கதிரியக்கப் பண்பற்றது |
மேற்கோள்கள் | [1][2][3] |
மிராபிலைட்டு (Mirabilite) என்பது Na2SO4•10H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கிளௌபர் உப்பு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நீரேறிய சோடியம் சல்பேட்டு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். நிறமற்றும் பளபளப்பாகவும் ஒற்றைச்சாய்வு படிக அமைப்பு கனிமமாக மிராபிலைட்டு தோன்றுகிறது. சோடியம் சல்பேட்டைக் கொண்டுள்ள உப்புநீரின் உப்புப்படர் பாறைகளிலிருந்து இது உருவாகிறது. இது உப்பு நீரூற்றுகள் மற்றும் உப்புநீர் தாழ் வடிநில ஏரிகளில் கிப்சம், ஆலைட்டு, தெனார்டைட்டு, திரோனா, கிளௌபரைட்டு மற்றும் எப்சோமைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இக்கனிமம் காணப்படுகிறது.
மிராபிலைட்டு நிலைப்புத்தன்மையற்றதாக உள்ளது. உலர்ந்த காற்றில் விரைவாக நீரை இழக்கிறது. கூர்நுனிக்கோபுர படிகங்களாக இருந்த வடிவம் வெள்ளைத் தூளாக மாற்றமடைந்து தெனார்டைட்டு (Na2SO4) கனிமமாககிறது. இதைப்போலவே , தெனார்டைட்டு தண்ணீரை உறிஞ்சி மிராபிலைட்டாக மாறுகிறது.
பாரம்பரிய சீன மருத்துவத்தில் மிராபிலைட்டு ஒரு சுத்திகரிப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது; மாண்டரின் மொழியில் இது மேங்கு சியாவ் என்று அழைக்கப்படுகிறது. மிராபிலைட்டு என்ற பெயர் யோகான் ருடால்ப் கிளௌபர் இதை தற்செயலாக செயற்கை முறையில் தயாரித்தபோது அற்புதமான உப்பு என்ற பொருள் கொண்ட சால் மிராபிலிசு என்ற இலத்தீன் மொழிச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் உருவாக்கப்பட்டது. [3][4]
மேற்கோள்கள்
- ↑ Mineralienatlas
- ↑ Mirabilite at Webmineral
- ↑ 3.0 3.1 Mirabilite at Mindat
- ↑ Hill, James C. (1979). "Johann Glauber's discovery of sodium sulfate - Sal Mirabile Glauberi". Journal of Chemical Education 56 (9): 593. doi:10.1021/ed056p593. Bibcode: 1979JChEd..56..593H. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1979-09_56_9/page/593.