உள்ளடக்கத்துக்குச் செல்

அரால்டு இயூரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரால்டு கிளேட்டன் இயூரீ
Harold Clayton Urey
அரால்டு உரே ~ 1963
பிறப்பு(1893-04-29)ஏப்ரல் 29, 1893
வாக்கர்ட்டன், இண்டியானா, அமெரிக்கா
இறப்புசனவரி 5, 1981(1981-01-05) (அகவை 87)
இலா ஃகொய்யா (La Jolla), கலிபோர்னியா, அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பியல் வேதியியல்
பணியிடங்கள்கோபனாகன் பல்கலைக்கழகம்
சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
அணுக்கருவியல் ஆய்வுகள் கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழம், சான் தியேகோ
கல்வி கற்ற இடங்கள்மோண்டானா பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலி
ஆய்வு நெறியாளர்கில்பெர்ட்டு என். இலூயிசு
முனைவர் பட்ட 
மாணவர்கள்
இசுட்டான்லி மில்லர்
அறியப்படுவதுதியூட்டிரியம் கண்டுபிடிப்பு
மில்லர்-இயூரீ செய்முறைக்காட்டு
இயூரீ-பிராடிலி விசைப்புலம்
விருதுகள்நோபல் பரிசு (வேதியியல்)(1934)
பிராங்கிளின் பதக்கம் (1943)
வேந்தியல் குமுகப் பேராளர்[1]
கையொப்பம்

அரால்டு கிளேட்டன் இயூரீ (Harold Clayton Urey) வேந்தியல் குமுகப் பேராளர்[1] (ஏப்பிரல் 29, 1893 – சனவரி 5, 1981) ஓர் அமெரிக்க இயற்பியல் வேதியியல் அறிவியலாளர். இவர் ஐதரசனின் ஓரிடத்தானாகிய தியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக 1934 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றுப் புகழ் ஈட்டியவர். அணுகுண்டு உருவாக்கத்திற்கும், உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாகுவதைச் செய்து காட்டிய மில்லர்-உரே செயல்முறைக்கும் புகழ் பெற்றவர்[2]

வாழ்க்கை வரைவு

[தொகு]

இயூரீ அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் இயூரீ என்பாருக்கும் கோரா இரெபெக்கா இரைநோல் (Cora Rebecca Reinoehl) என்பாருக்கும் மகனாகப் பிறந்தார். அமெரிக்காவில் மாண்டானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கில்பெர்ட்டு இலூயிசு என்பாரின் நெறிகாட்டலில் வேதியியலில் வெப்பவியக்கவியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

பெர்க்கிலியில் இயற்பியலாளர் இரேமண்டு டி. பிர்கெ அவர்களால் அறிவுத்தாக்கம் பெற்று பின்னர் கோப்பனாகனில் நீல்சு போருடன் சேர்ந்து அணுக்கட்டுமானம் பற்றி ஆய்வு செய்தார். அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் 1924 முதல் 1928 வரை வேதியியல் துணையாளராக ( 'Associate in Chemistry' ) இருந்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்கினார். பின்னர் ஆர்தர் உருவார்க்கு (Arthur Ruark) என்பாருடன் சேர்ந்து "அணுக்கள், குவாண்டாக்கள், மூலக்கூறுகள்" (Atoms, Quanta and Molecules) என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதினார். இது ஆங்கிலத்தில் உருவான குவாண்டம் இயங்கியல் பற்றியும் அதன் பயன்பாடுகளும் பற்றியுமான முதல் நூல்களில் ஒன்று. இயூரீயுக்கு அணுக்கருவியலில் ஆர்வம் ஏற்பட்டு அதில் ஆய்வு செய்ததின் விளைவாய் தியூட்டிரியம் கண்டுபிடிப்புக்கு வழிகோலியது.

அடிக்குறிப்புகளும் பேற்கோள்களும்

[தொகு]
  1. 1.0 1.1 எஆசு:10.1098/rsbm.1983.0022
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. . பப்மெட்:7024560. 

ஆய்வு வெளியீடுகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரால்டு_இயூரீ&oldid=3232008" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy