உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டிமனி முக்குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்டிமனி முக்குளோரைடு (Antimony trichloride) என்பது SbCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். மென்மையான, நிறமற்ற, மூக்கைத்துளைக்கக் கூடிய நெடியுடைய ஒரு திண்மமாகும். இச்சேர்மத்தை இரசவாதிகள் ஆண்டிமனியின் வெண்ணெய் என்று அழைப்பதுண்டு.

தயாரிப்பு

[தொகு]

ஆண்டிமனி முக்குளோரைடானது குளோரினை ஆண்டிமணி, ஆண்டிமனி முப்புரோமைடு, ஆண்டிமனி மூவாக்சைடு அல்லது ஆண்டிமனி முச்சல்பைடு ஆகியவற்றுடன் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இச்சேர்மம் ஆண்டிமனி மூவாக்சைடை அடர் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலமும் தயாரிக்கலாம்.

வினைகள்

[தொகு]
ஐதரோகுளோரிக் அமிலத்தில் உள்ள ஆண்டிமனி முக்குளோரைடு கரைசல்

SbCl3 ஆனது எளிதில் நீராற்பகுக்கப்படலாம் என்பதால் இச்சேர்மத்தின் மாதிரிகள் ஈரப்பத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். மிகக் குறைவான அளவு நீருடன் இது ஆண்டிமனி ஆக்சிகுளோரைடை உருவாக்குவதோடு ஐதரசன் குளோரைடை வெளியிடவும் செய்கிறது:

SbCl3 + H2O → SbOCl + 2 HCl

அதிகப்படியான நீருடன் இச்சேர்மம் Sb4O5Cl2 ஐ உருவாக்குகிறது. அது 460°செல்சியசு வெப்பநிலையில், ஆர்கன் வாயுச்சூழலில் Sb8O11Cll2 ஆக மாற்றமடைகிறது[1]

SbCl3 ஆனது ஆலைடுகளுடன் அணைவுச் சேர்மங்களை எளிதில் உருவாக்குகிறது. ஆனால், விகிதாச்சார வாய்ப்பாடுகள் அவற்றின் இயல்பை விளக்கப் போதுமானவையாக இல்லை[1] உதாரணமாக, (C5H5NH)SbCl4 என்பது உருக்குலைக்கப்பட்ட Sb எண்முகி அமைப்புடன் ஒரு தொடரைக் கொண்டுள்ளது.III இதே போன்று (C4H9NH3)2SbCl5 உப்பானது [SbCl52−]n என்ற இயைபை உடைய ஒரு பலபடி எதிரயனியை திரிபடைந்த எண்முகி Sb ஐக் கொண்டுள்ளதுIII.[2]

நைட்ரசனை வழங்கும் ஈனிகளுடன் தனித்த எலக்ட்ரான் இரட்டையைக் கொண்ட ஒளியியல் மாற்றியப் பண்பைக் கொண்ட L அணைவுச் சேர்மங்கள் உருவாகின்றன. உதாரணமாக, Ψ-முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு LSbCl3 மற்றும் Ψ-எண்முகி L2SbCl3.[3]

SbCl3 மட்டும் தான் ஒரே ஒரு வலிமை குறைந்த லூயி காரமாகும்,[1] இருப்பினும் சில அணைவுச் சேர்மங்கள் கார்போனைல் அணைவுச் சேர்மங்களுக்கு உதாரணமாக இருக்கின்றன. அவை Fe(CO)3(SbCl3)2 மற்றும் Ni(CO)3SbCl3 ஆகும்.[3]

அமைப்பு

[தொகு]

வாயு நிலையில் SbCl3 ஆனது பிரமிடு அமைப்பைக் கொண்டதும், Cl-Sb-Cl பிணைப்புக் கோணம் 97.2° மற்றும் பிணைப்பு நீளம் 233 பிகோ மீட்டர் கொண்டதும் ஆகும்.[4] SbCl3 இல் Sb ஆனது மூன்று Cl அணுக்களை 234 பிகோமீட்டர் தொலைவில் கொண்டிருப்பது SbCl3 மூலக்கூறு அலகின் நிலைத்தன்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அருகாமையில் ஐந்து குளோரின் அணுக்கள் உள்ளன. இரண்டு குளோரின் அணுக்கள் 346 பிகோமீட்டர் தொலைவிலும், ஒரு குளோரின் அணு 361 பிகோமீட்டர் தொலைவிலும் மற்றும் இரண்டு குளோரின் அணுக்கள் 374 பிகோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. இந்த 8 அணுக்கள் இரு தொப்பிகளை உடைய முப்பட்டகத்தை அமைப்பதாகக் கருதலாம். இந்த தொலைவுகள் BiCl3 மூலக்கூறுடன் ஒப்பிடும் போது அதில் காணப்படும் 3 அருகாமை அணுக்கள் 250 பிகோமீட்டர் தொலைவிலும், இரண்டு அணுக்கள் 324 பிகோமீட்டர் தொலைவிலும் மற்றும் ஒரு மூன்று அணுக்கள் 336பிகோமீட்டர் சராசரித் தொலைவிலும் அமைந்துள்ளதற்கு மாறாக அமைந்துள்ளது. இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், Bi அணுக்களைச் சுற்றியுள்ள 8 அணுக்களும் Sb அணுவிற்கு அருகில் உள்ள 8 அணுக்களைக் காட்டிலும் நெருக்கமாக உள்ளது. இந்த அமைப்பு Bi அணுவானது உயர் அணைவு எண்ணை ஏற்பதற்கான போக்கினை விளக்குவதாக அமைகிறது.[1][4]

பயன்கள்

[தொகு]

SbCl3 ஆனது கார்-பிரைசு சோதனையில் உயிர்ச்சத்து ஏ மற்றும் தொடர்புடைய கெரோட்டினாய்டுகளைக் கண்டறிய உதவும் வினைக்காரணியாக உள்ளது. ஆண்டிமணி முக்குளோரைடானது கெரோட்டினாய்டுகளுடன் வினைபுரிந்து நீல நிறமுள்ள அணைவுச் சேர்மங்களைத் தருகின்றது. இதனை வண்ண அளவையியல் மூலமாக அளந்தறிய முடியும். ஆண்டிமணி முக்குளோரைடானது அப்நிந்தே மூலிகையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் ஆவ்சோ விளைவை அதிகப்படுத்துவதற்கான கலப்படப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பழங்காலங்களில கால்நடைக் கன்றுகளில் காணப்பட்ட குறுங்கொம்புகளை வெட்டாமல் கரைத்து அகற்றுவதற்கு இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீரகக்கார்பன் மூலக்கூற்றினை உடைத்தல், பலபடியாக்கல் வினை மற்றும் குளோரினேற்ற வினைகள் ஆகியவற்றில் இது வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சாயமூன்றியாகவும் இதர ஆண்டிமணி உப்புக்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கரைசலானது குளோரல், அரோமேட்டிக் சேர்மங்கள் மற்றும் உயிர்ச்சத்து ஏ ஆகியவற்றுக்கான பகுப்பாய்வுக் காணியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5] கரிமத் தொகுப்பு மாற்ற வினைகளில் லூயிசு அமில வினைவேகமாற்றியாக மிகச் சிறந்த பயனைக் கொண்டுள்ளது.

A solution of antimony trichloride in liquidதிரவ ஐதரசன் சல்பைடில் கரைக்கப்பட்ட ஆண்டிமணி முக்குளோரடு கரைசலானது ஒரு நல்ல கடத்தியாகும். இருப்பினும் இந்தப் பயன்பாடானது ஐதரசன் சல்பைடு திரவ நிலையில் இருப்பதற்கு தேவைப்படும் மிகக்குறைந்த வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தம் ஆகிய நிபந்தனைகளின் காரணமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. pp. 558–571. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. Zarychta, B.; Zaleski, J. "Phase transitions mechanism and distortion of SbCl63− octahedra in bis(n-butylammonium) pentachloroantimonate(III) (C4H9NH3)2[SbCl5]". Z. Naturforsch. B 2006, 61, 1101–1109. Abstract (PDF)
  3. 3.0 3.1 "Antimony: Inorganic Chemistry" R. Bruce King Encyclopedia of Inorganic Chemistry Editor R Bruce King (1994) John Wiley and Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
  4. 4.0 4.1 Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition, pp. 879 - 884, Oxford Science Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  5. Patnaik, P. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
  6. Wilkinson, John A. (1931). "Liquid Hydrogen Sulfide as a Reaction Medium." (in EN). Chemical Reviews 8 (2): 237–250. doi:10.1021/cr60030a005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி_முக்குளோரைடு&oldid=3907194" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy