உள்ளடக்கத்துக்குச் செல்

கிரெம்லின்

ஆள்கூறுகள்: 55°45′6″N 37°37′4″E / 55.75167°N 37.61778°E / 55.75167; 37.61778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாசுகோ கிரெம்லின்
உள்ளூர் பெயர்
உருசியம்: Московский Кремль
அமைவிடம்மாசுகோ, உருசியா
ஆள்கூற்றுகள்55°45′6″N 37°37′4″E / 55.75167°N 37.61778°E / 55.75167; 37.61778
பரப்பளவு27.7 ha (0.277 km2)
கட்டப்பட்டது1482–1495
அலுவல் பெயர்கிரெம்லினும் செஞ்சதுக்கமும், மாசுக்கோ
வகைபண்பாடு
வரன்முறைi, ii, iv, vi
தெரியப்பட்டது1990 (14வது தொடர் )
உசாவு எண்545
பகுதிகிழக்கு ஐரோப்பா
கிரெம்லின் is located in மத்திய மாசுகோ
கிரெம்லின்
மத்திய மாசுகோவில் அமைவிடம்
கிரெம்லின் is located in உருசியா
கிரெம்லின்
உருசியாவில் அமைவிடம்
கிரெம்லின் is located in ஐரோப்பா
கிரெம்லின்
ஐரோப்பாவில் அமைவிடம்

கிரெம்லின் (Kremlin) (Moscow Kremlin; உருசியம்: Московский Кремль, ஒ.பெ Moskovskiy Kreml', பஒஅ[ˈmɐˈskofskʲɪj krʲemlʲ]) என்ற உருசிய சொல் கோட்டை அல்லது கொத்தளத்தைக் குறிப்பதாகும். உருசியாவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள மாஸ்கோ கிரெம்லின் பல நேரங்களில் கிரெம்லின் எனவே குறிப்பிடப்படுகிறது. இது மாஸ்கோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பலப்படுத்தப்பட்ட கோட்டையாகும்.தெற்கே மாஸ்க்வா ஆறும் கிழக்கே புனித பாசில் தேவாலயமும் செஞ்சதுக்கமும் மேற்கே அலெக்சாண்டர் பூங்காவும் எதிர்நோக்கியுள்ளது.உருசியாவின் நன்கு அறியப்பட்ட கிரெம்லின்களில் ஒன்றான இதனுள் நான்கு அரண்மனைகளும் நான்கு தேவாலயங்களும் உள்ளன. கிரெம்லின் சுவர்கள் சூழ்ந்துள்ள இக்கோட்டையில் உள்ள கோபுரங்கள் கிரெம்லின் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன.இந்த கோட்டையில் உருசியாவின் அதிபர் மாளிகை அமைந்துள்ளது.

எவ்வாறு வெள்ளைமாளிகை என்பது அமெரிக்க அரசினை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறதோ அவ்வாறே கிரெம்லின் என்னும் சொல் சோவியத் ஒன்றியத்தின் அரசியலைக் குறிக்கும் சொல்லாக (1922–1991) விளங்கியது.

மாஸ்கோ கிரெம்ளினின் ஒட்டுமொத்த வான்வழி
மாசுக்கோ கிரெம்லின். தென்மேற்கில் இருந்து பறவைப் பார்வை

லெனின் உடல்பாதுகாப்பகம்

[தொகு]

இக்கோட்டையினுள்ளே தான் உருசியப் புரட்சிக்குத் தலைமையேற்ற விளாடிமிர் லெனின் உடல் பாதுகாக்கப் படுகிறது.இங்கு பாதுகாக்கப் பட்டு வந்த அடுத்த தலைவர் ஜோசப் ஸ்டாலின்உடல் நவம்பர் 1, 1961 அன்று வெளியே எடுக்கப்பட்டு அப்போதைய அதிபர் நிகிடா குருச்சேவ் ஆணைப்படி கிரெம்லின் சுவர்களுக்கு வெளியே எளிய கல்லறை ஒன்றில் புதைக்கப்பட்டது.[1]

உசாத்துணைகள்

[தொகு]

புத்தகங்கள்

[தொகு]
  • Ivanov, Vladimir N. (1971). Московский Кремль [Moscow's Kremlin] (in ரஷியன்). Moscow.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Merridale, Catherine (2013). Red Fortress: History and Illusion in the Kremlin. New York: Henry Holt. pp. 505. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780805086805.
  • Nenakormova, Irina S. (1987). Государственные музеи Московского Кремля [Art treasures from the Museums of the Moscow Kremlin] (in ரஷியன்). Moscow: Iskusstvo.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. "ஸ்டாலின் உடல் வெளியே எடுக்கப்பட்டது". Archived from the original on 2009-04-15. பார்க்கப்பட்ட நாள் 2009-12-08.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிரெம்லின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெம்லின்&oldid=3731505" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy