உள்ளடக்கத்துக்குச் செல்

சரளைக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரளைக் கல்(படத்தில் உள்ள பெரிய துண்டம் 4 cm)
ஒரு சரளைக் கல் பாதை , இந்தியானாவில்
சரளைக்கல் ஏற்றப்படுதல்

சரளைக் கல்(ஆங்கிலம்: Gravel /ˈɡrævəl/) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்(2 முதல் 4 mm or 0.079 முதல் 0.157 அங்) கூழங்கற்கள் என (4 முதல் 64 mm or 0.2 முதல் 2.5 அங்) வகைப்படுத்தலாம். ISO 14688 தரத்தின் படி சரளைக் கற்கள் நுண்ணியது, நடுத்தரம், பெரியது என 2 mm க்கு 6.3 mm க்கு 20 mm க்கு 63 mm ஆக வகைப்படுத்தப்படும். ஒரு கனமீட்டர் சரளைக் கல் திணிவளவில் 1,800 கி.கி (கன அடியின் திணிவு 3,000 இறத்தல்) ஆகும்.

சரளைக் கற்கள் வணிக ரீதியில் பல்வேறு உபயோகங்களைக் கொண்ட ஒரு உற்பத்திப் பொருள் ஆகும். வீதிகளின் மேற்பரப்புகள் சரளைக் கற்களால் படலிடப் படுகின்றன. உலக அளவிலே அதிக வீதிகள் பைஞ்சுதைகளால் அல்லது கருங்காரைகளால் படலிடப்படுவதிலும் அதிக அளவில் சரளைக் கற்களால் படலிடப் படுவது அதிகமாகும்.; உருசியாவில் மட்டும் 400,000 km (250,000 mi) சரளைக் கல் வீதிகள் காணப்படுகின்றன.[1] பைஞ்சுதை உற்பத்தியிலும் மணலும், சரளைக் கல்லும் முக்கியமானதாகும்.

புவியியல் உருவாக்கம்

[தொகு]

சரளைக் கல் படிவுகள் கானப்படுதல் பொதுவான புவியியல் கட்டமைப்பு ஆகும். பாறைகள் வானிலையாலழிதல் மற்றும் அரிப்புக்குள்ளாவதால் இவை உருவாகின்றன. நீரோட்டங்கள் மற்றும் அலைகள் சரளைக் கற்களின் தேக்கத்தை பெருமளவாக்குகின்றன. இதனால் சில வேளைகளில் சரளைக் கற்கள் இறுக்கமடைந்து கலப்புப் பாறைகள் எனப்படும் அடையற் பறைகளாக மாறுகின்றன. இயற்கை சரளைக் கற்கள் மனிதத் தேவைகளுக்கு குறைவாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சுண்ணாம்புக் கல், கருங்கள் மற்றும் மட்கல் முதலானவை கல் உடைக்கும் வேலைத்தலங்களில் உடைக்கப்படுகின்றன.

சரளைக் கல் உடைக்கும் வேலைத் தலங்கள் சரளைக் கற்குழிகள் எனப்படும். தெற்கு இங்கிலாந்து குறிப்பாக அதிக அளவு சரளைக் கல்லினை வைத்திருப்பதற்காக காரணம் பனியுகத்திலிருந்து அதிக அளவிலான சரளைக் கற் படிவுகள் ஏற்பட்டமையாகும்.

புதிய உற்பத்திகள்

[தொகு]

2006 இன் படி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் தன் உலகில் சரளைக் கல் நுகர்வில் முன்னணியில் உள்ளனர்.[2][3]

சொற்பிறப்பியல்

[தொகு]

சரளைக் கற்கள் என்பதை குறிக்க்கும் ஆங்கில சொல்லான gravel பிரேடொன் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றது. பிரேடொன் மொழியில் "grav" என்பது கரையோரம் என்பதைக் குறிக்கும். கரையோரத்தில் காணப்படும் சிறுகற்கள் என அது கூறப்பட்டாலும் பல அகராதிகளில் இது புறக்கணிக்கப்பட்டுள்ளது. பழைய பிரேஞ்சுச் சொல்லான gravele[4] or gravelle.[5]

சரளைக் கல் என்பது பொதுவாக பல்வேறு அளவுடைய கற்கள், மண், களி என்பவற்றின் கலவையாயிருத்தல் ஆகும். அமெரிக்கன் ஆங்கிலத்தில் சிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட குன்றுகள் துகள் கல் எனப்படும்.[6][7]

சரளைக் கற்களின் வகைகள்

[தொகு]
கற்களுடன் கூடிய சரளைக் கல் 5 மற்றும் 15 mm
சேருமனி சரளைக் கல் குழியில் மணல் மற்றும் சரளைக் கல் வேறாக்கிS

சரளைக் கற்களின் வகைகளாவன:

  • ஆற்றங்கரைச் சரவைக் கல்: மணல் அல்லது களியுடன் கலந்ததாக ஆற்றங்கரைகளில் படிந்து கானப்படும் சரவைக் கற்கள்.
  • இருக்கை சரளைக் கல்: பள்ளத்தாக்குகள் அல்லது ஓடைகளின் கரைகளில் மற்றும் ஓடைகளின் அடிகளில் படிந்து காணப்படும்.
  • சிற்றோடைக் கல்: இது கோள வடிலாக சீராக்கப்பட்டு காணப்படும். இத்தகைய கற்கள் பைஞ்சுதை தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுகின்றது.
  • உடைக்கப்பட்ட கற்கள்:பாறைகளில் இருந்து பல்வேறு அளவுகளில் உடைக்கப்பட்ட கற்கள் இவையாகும். தேவைக்கு ஏற்ப இவை தயாராகும். பொதுவாக வீதிகள் அமைப்பதற்கு தார் உடன் இது சேர்த்துப் பயன்படும். கருங்கல், தொலமைட்டு கல் மற்றும் சுண்ணக்கல் முதலானவற்றிலிருந்து உடைக்கப்ப்ட்ட கற்கள் பெறப்படும்.[8]
  • நுண் சரளைக் கல்: 2 முதல் 8 மில்லிமீட்டர் வரையிலான விட்டத்தைக் கொண்ட துணிக்கை அளவுடைய சரளைக் கற்கள் நுண் சரளைக் கற்கள் எனப்படும்.
  • கற்றுகள்: மிக நுண்ணிய சரளைக் கற்களின் துகள்கள். இவை அரிக்கப்படும்போது இறுதிநிலையில் கிடைப்பனவாகும். நுன் துகள்களாக் காணப்படும்.
  • தங்கல் சரளைக் கற்கள்: நுண் துணிக்கைகளை அகற்றிய பின்னர் சேரும் சரளைக் கற்கள் தங்கல் சரளைக் கற்கள் எனப்படும்.
  • பணங்கட்டிய சரளைக் கல்: பொன் முதலான விலை மதிப்புள்ள உலோக அகழ்வின் போது கிடைக்கும் சரளைக் கற்கள் பணங்கொடுத்த சர்ளைக் கற்கள் எனப்படும்.
  • பட்டாணி சரளைக் கல்: சிறிய உருண்டை வடிவிலான சரளைக் கற்கள். வீதிகள் அமைப்பதிலும் வீடுகளிலுள்ள நீரலங்கார தடாகங்களிலும் இடப்படும்.
  • அடிவார சரளைக் கல்: மலை அருவிகளினால் உயரமான பகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்டு சம தரைகளில் படிவாகி காணப்படும் சரளைக் கர்கள் இவை ஆகும்.
  • சமவெளி சரளைக் கற்கள்: மலைச் சமவெளிகளில் காணப்படும் சரளைக் கற்கள் இவை ஆகும்.

தாவர வாழ்வுடனான தொடர்பு

[தொகு]

சரளைக் கற்கள் அதிகளவாகக் காணப்படும் பகுதிகளில் தவர வளர்ச்சி சிறப்பற்றதாக காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.[9] இந்த பாதிப்பான விளைவுக்குக் காரணம், சரளைக் கற்கள் ஈரலிப்பை தேக்குவதில் திறனற்றவை. அதே போல் போசணைக் கனியுப்புகளை கொண்டிருப்பதிலும் போதாமை கொண்டது. இதனால் சரளைக் கற்கள் பெரும்பாலான கனியுப்புக்களை குறைந்த அலவிலேயே கொண்டிருக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY" (PDF). 1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY. Archived from the original (PDF) on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  2. Mineral Commodity Summaries 2006 2009
  3. Industrial Sand And Gravel (Silica): World Production, By Country 2009
  4. Collins English Dictionary – Complete & Unabridged 11th Edition. Retrieved 30 August 2012 from CollinsDictionary.com website:http://www.collinsdictionary.com/dictionary/english/gravel
  5. Gravel, n., Oxford English Dictionary Second Edition on CD-ROM (v. 4.0) © Oxford University Press 2009
  6. "gravel." Noah Webster's 1828 American Dictionary of the English Language. 2015. http://1828.mshaffer.com/d/word/gravel (8 January 2015)
  7. "Gravel, n." def. 1. Whitney, William Dwight. The Century Dictionary; an Encyclopedic Lexicon of the English Language,. Vol. 3. New York: Century, 1889. 2607. Print.
  8. "Quarry Process - QP, DGA - NJ, NY, NYC, PA". www.braenstone.com. Archived from the original on 2018-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  9. C.Michael Hogan. 2010. Abiotic factor. Encyclopedia of Earth. eds Emily Monosson and C. Cleveland. National Council for Science and the Environment பரணிடப்பட்டது 8 சூன் 2013 at the வந்தவழி இயந்திரம். Washington DC
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரளைக்_கல்&oldid=3553119" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy