சுரிகை
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சுரிகை[சான்று தேவை] என்பது ஒரு கத்தி, குத்துவாள், வாள் அல்லது கூர் வடிவ சுரிகை ஆயுதமாகும், இது ஒரு துமுக்கி, தெறாடி அல்லது ஒத்த வேட்டெஃகத்தின் முகவாய் முடிவில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் சமரில் சுடுகலனானது தேவைக்கேற்ப ஈட்டி போன்ற ஆயுதமாக மாறுகிறது. 17 ஆம் நூற்றாண்டு முதல் முதலாம் உலகப் போர் வரை, இது காலாட்படை தாக்குதல்களுக்கான முதன்மை ஆயுதமாகக் கருதப்பட்டது. இன்று, இது ஒரு துணை ஆயுதமாக அல்லது கடைசி முயற்சியாக கருதப்படுகிறது.
வரலாறு
[தொகு]ஆங்கிலேயரின் பயோனெட் என்ற சொல் 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து வருகிறது, ஆனால் அந்த நேரத்தில் சுரிகைகள் வேட்டெஃகங்களின் முனைகளுக்கு பொருத்தக்கூடிய கத்திகளா, அல்லது வெறுமனே ஒரு வகை கத்தியா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, கோட்கிரேவின் 1611 அகராதியானது பயோனெட்டை "ஒரு வகையான சிறிய தட்டையான குத்துவாள், எண்ணைப்பலகையில் தீட்டப்பட்ட கத்தி; அல்லது இடையில் தொங்கவிடத்தக்க ஒரு பெருமைமிகு கத்தி" என்று விரித்துரைக்கிறது. அதேபோல், 1655 ஆம் ஆண்டில் பியோர் பொரெல் என்பவர் ஒரு பயோனெட் என்று அழைக்கப்படும் ஒரு வகையான நீண்ட கத்தி பேயோனில் உண்டாக்கப்பட்டது என்று மட்டுமே எழுதியுள்ளார், ஆனால் மேலதிக விளக்கத்தை அளிக்கவில்லை.[1]
தமிழில் இதற்கான பெயரான 'சுரிகை' என்பது 1987 இன் பிற்பகுதியில் ஈழத்தில் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது ஆகும். அக்கால கட்டத்தில் அவர்கள் இதனை 'சனியன்' என்றும் சுட்டினர்.
வகைகள்
[தொகு]பிடுங்கல் சுரிகை
[தொகு]கோறைச் சுரிகை
[தொகு]வாள் சுரிகைகள்
[தொகு]பன்நோக்கு சுரிகைகள்
[தொகு]
குறிப்புகள்
[தொகு]
- ↑ H. Blackmore, Hunting Weapons, p. 50