நவகாளிப் படுகொலைகள்
நவகாளிப் படுகொலைகள் | |
---|---|
தப்பிப் பிழைத்தவருடன் உரையாடும் காந்தி | |
இடம் | நவகாளி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய வங்காளதேசம்) |
நாள் | அக்டோபர் - நவம்பர் 1946 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | வங்காள இந்துக்கள் |
தாக்குதல் வகை | படுகொலை, கட்டாய மதமாற்றம் |
ஆயுதம் | Ramdaos, Teta, Koch |
இறப்பு(கள்) | 285[1]; மற்ற ஆதாரங்களின்படி 5,000[2][3] |
தாக்கியோர் | முஸ்லிம் தேசியப் படை, முன்னாள் இரானுவத்தினர், இசுலாமிய அடிப்படைவாத தீவிரவாதிகள் |
நவகாளிப் படுகொலைகள் (Noakhali genocide or Noakhali Carnage,(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது 1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.[4] இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக நவகாளி மாவட்டம் மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.[2][5] இந்த தாக்குதலில் சரியாக லட்சத்து ஐம்பதாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். கண்டு மிகவும் மனம் வருந்திய காந்தி நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.[6]அவருடன் எல்லை காந்தி கான் அப்துல் கப்பார் கான் அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது நவகாளி யாத்திரை எனப்பட்டது.[7]
தமிழக எழுத்தாளர் சாவி என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ROY, Sukumar (1947). Noakhalite Mahatma (নোয়াখালীতে মহাত্মা) (in Bengali). 9 Shyama Charan Dey Street, Calcutta: Orient Book Company. p. 14.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ 2.0 2.1 "India: Written in Blood". Time. 28 October 1946. p. 42.
Mobs in the Noakhali district of east Bengal ... burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.
- ↑ Khan, Yasmin (2017) [First published 2007]. The Great Partition: The Making of India and Pakistan (New ed.). Yale University Press. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-23032-1.
- ↑ Time. 28 October 1946.
- ↑ "Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946". Archived from the original on 2018-09-20. பார்க்கப்பட்ட நாள் 2018-09-23.
- ↑ இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்?
- ↑ https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive
- ↑ நவகாளி யாத்திரை
வெளி இணைப்புகள்
[தொகு]- Noakhali genocide பரணிடப்பட்டது 2019-10-28 at the வந்தவழி இயந்திரம்
- Noakhali Noakhali பரணிடப்பட்டது 2012-04-11 at the வந்தவழி இயந்திரம்