உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோலா ஸ்டர்ஜியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோலா ஸ்டர்ஜியன்
Nicola Sturgeon
2021 இல் நிக்கோலா இசுட்டர்ச்சியன்
இசுக்கொட்லாந்து முதலமைச்சர்
பதவியில்
20 நவம்பர் 2014 – 28 மார்ச் 2023
ஆட்சியாளர்கள்எலிசபெத் II
சார்லசு III
Deputyயோன் சுவின்னி
முன்னையவர்அலெக்சு சால்மண்டு
பின்னவர்அம்சா யூசப்
இசுக்கொட்டிய தேசியக் கட்சியின் தலைவர்
பதவியில்
14 நவம்பர் 2014 – 27 மார்ச் 2023
முன்னையவர்அலெக்சு சால்மண்டு
பின்னவர்அம்சா யூசப்
இசுக்காட்லாந்தின் துணை முதலமைச்சர்
பதவியில்
17 மே 2007 – 20 நவம்பர் 2014
முதன்மை அமைச்சர்அலெக்சு சால்மண்டு
முன்னையவர்நிக்கோல் இசுட்டீவன்
பின்னவர்யோன் சுவின்னி
இசுக்கொட்டிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில்
3 செப்டம்பர் 2004 – 14 நவம்பர் 2014
தலைவர்அலெக்சு சால்மண்டு
உள்கட்டமைப்பு, மூலதன முதலீடு மற்றும் நகரங்களுக்கான அமைச்சுச் செயலாளர்
பதவியில்
5 செப்டம்பர் 2012 – 19 நவம்பர் 2014
முதன்மை அமைச்சர்அலெக்சு சால்மண்டு
உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான அமைச்சுச் செயலாளர்
பதவியில்
17 மே 2007 – 5 செப்டம்பர் 2012
முதன்மை அமைச்சர்அலெக்சு சால்மண்டு
இசுக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 மே 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நிக்கொலா பெர்குசன் இசுட்டர்ச்சியன்

19 சூலை 1970 (1970-07-19) (அகவை 54)
இர்வைன், அயிர்சயர், இசுக்கொட்லாந்து
அரசியல் கட்சிஇசுக்கொட்டிய தேசியக் கட்சி
துணைவர்
பீட்டர் முரெல் (தி. 2010)
முன்னாள் கல்லூரிகிளாஸ்கோ பல்கலைக்கழகம்
கையெழுத்து
இணையத்தளம்Parliament இணையதளம்

நிக்கோலா பெர்குசன் இசுட்டர்ச்சியன் (Nicola Ferguson Sturgeon, பிறப்பு: 19 சூலை 1970) இசுக்காட்லாந்து அரசியல்வாதி ஆவார். இவர் 2014 முதல் மார்ச் 2023 வரை இசுக்காட்லாந்தின் முதலமைச்சராகவும், இசுக்காட்டிய தேசியக் கட்சியின் தலைவராகவும் பதவியில் இருந்தார்.[1][2] இவர் 1999 முதல் இசுக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

அயுர்சயர் என்ற இடத்தில் பிறந்த இவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்று பட்டம் பெற்றார். கிளாஸ்கோவில் சட்டவறிஞராகப் பணியாற்றிய இவர், 1999 இசுக்காட்டிய நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இசுக்கொட்டிய தேசியக் கட்சியின் எதிர்க்கட்சி நிழல் அமைச்சராக கல்வி, உடல்நலம், நீதி ஆகிய பணியாற்றினார். 2004 இல் இவர் தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார், ஆனால் பின்னர் அலெக்சு சால்மண்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, போட்டியிடுவதைத் தவிர்த்து, துணைத் தலைவரானார். அலெக்சு சால்மண்டு பிரித்தானிய மக்களவையில் உறுப்பினராக இருந்ததால், நிக்கோலா இசுக்காட்லாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக 2004 முதல் 2007 வரை பணியாற்றினார். 2007 தேர்தலில் இசுக்காட்டியத் தேசியக் கட்சி வெற்றி பெற்று தனது முதலாவது சிறுபான்மை அரசை அமைத்தது. நிக்கோலா துணை முதலமைச்சரானார். 2007 முதல் 2012 வரை, உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான அமைச்சுச் செயலாளராகப் பணியாற்றினார். 2011 தேர்தலில் தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. நிக்கோலா உள்கட்டமைப்பு, மூலதன முதலீடு மற்றும் நகரங்களுக்கான அமைச்சுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் 2014 இசுக்காட்லாந்து விடுதலைக்கான வாக்கெடுப்புக்கான சட்டமியற்றும் செயல்முறைக்குப் பொறுப்பாக இருந்தார். இவ்வாக்கெடுப்பில் ஆம் இசுக்காட்லாந்து பரப்புரை தோல்வியடைந்ததன் விளைவாக தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதவியில் இருந்து சால்மண்ட் விலகினார்.

நிக்கோலா இசுட்டர்ச்சியன் 2014 நவம்பரில் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் இசுக்காட்லாந்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இப்பதவியில் அமர்ந்த முதலாவது பெண்ணும் இவரே.[3][4] 2015 பிரித்தானியப் பொதுத் தேர்தலில் 59 இடங்களில் 56 இடங்களை வென்று இசுக்காட்டிய வெஸ்ட்மின்ஸ்டர் தொகுதிகளில் தொழிற் கட்சியின் முப்பது ஆண்டுகால தேர்தல் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் லிபரல் டெமக்கிராட்சு மூன்றாவது பெரிய கட்சியானது. 2017 பொதுத் தேர்தலில் 21 இடங்களை தேசியக் கட்சி இழந்த போதிலும், நிக்கோலா பதவியில் இருந்த எட்டு ஆண்டுகள் முழுவதும் தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து அனுபவித்தது. பெரும்பான்மையை இழந்த போதிலும், நிக்கோலா 2016 இல் இரண்டாவது முறையாக பதவிக்கு வந்து சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்கினார். 2016 பிரெக்சிட்டு வாக்கெடுப்பில் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக முடிவெடுத்த போதிலும், இசுக்காட்லாந்தில் 62% வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கக் கிடைத்திருந்தது. இருந்தாலும் நிக்கோலாவின் இரண்டாவது பதவிக்காலம் பிரெக்சிட்டு தேர்தலில் ஆதிக்கம் செலுத்தியது. இவர் பிரெக்சிட்டைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி விடுதலை குறித்த இரண்டாவது வாக்கெடுப்பு நடத்த விழைந்தார், ஆனால் கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் இத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன. 2021 தேர்தலில் மூன்றாவது தடவையாக வெற்றி பெற்று இசுக்காட்டிய பசுமைக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

பிரித்தானிய அரசாங்கம் பிரிவு 30 உத்தரவை வழங்க மறுத்ததாலும், நவம்பர் 2022 இல் இசுக்காட்டிய நாடாளுமன்றத்திற்கு வாக்கெடுப்பு நடத்துவதற்கான அதிகாரம் இல்லை என ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலும், நிக்கோலாவின் அரசாங்கத்தின் இரண்டாவது பொது வாக்கெடுப்புக்கான பரந்த விடுதலை இயக்கத்தின் அழைப்புகள் தோல்வியடைந்தன. 2023 பெப்ரவரி 15 அன்று, இசுக்காட்டிய தேசியக் கட்சியின் தலைமை மற்றும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிக்கோலா அறிவித்தார். அவருக்குப் பிறகு அவரது அமைச்சரவையில் சுகாதாரச் செயலராகப் பணியாற்றிய அம்சா யூசப் 2023 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தலைமைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nicola Sturgeon: the First Female and Now Longest Serving First Minister". Bloomberg.com. 2022-05-24 இம் மூலத்தில் இருந்து 4 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221004040220/https://www.bloomberg.com/news/articles/2022-05-24/nicola-sturgeon-the-first-female-and-now-longest-serving-first-minister. 
  2. Specia, Megan (2023-02-15). "Nicola Sturgeon Is Scotland's Longest-Serving First Minister" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 19 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230319174408/https://www.nytimes.com/2023/02/15/world/europe/who-is-nicola-sturgeon-scotland.html. 
  3. Brooks, Libby (19 September 2014). "Alex Salmond's resignation could give Nicola Sturgeon her day of destiny". தி கார்டியன் (London) இம் மூலத்தில் இருந்து 9 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141209154913/http://www.theguardian.com/politics/2014/sep/19/alex-salmond-resignation-nicola-sturgeon-destiny. 
  4. Campbell, Glenn (13 November 2014). "The transition from Alex Salmond to Nicola Sturgeon". BBC News இம் மூலத்தில் இருந்து 17 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141117032228/http://www.bbc.com/news/uk-scotland-scotland-politics-30011421. 
  5. "Nicola Sturgeon: Scotland's first minister to resign saying 'time is now' to go". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 22 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  6. "Nicola Sturgeon to resign as Scottish first minister". BBC News. 15 February 2023 இம் மூலத்தில் இருந்து 15 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230215095806/https://www.bbc.co.uk/news/uk-scotland-64647907. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலா_ஸ்டர்ஜியன்&oldid=3858745" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy