புதன்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு
புதன்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு (leap year starting on Wednesday) என்பது சனவரி 1 அன்று புதன்கிழமையில் தொடங்கி திசம்பர் 31 இல் வியாழக்கிழமையில் முடிவுறும் 366 நாட்களைக் கொண்ட (அதாவது பெப்ரவரி 29 உட்பட) ஓர் ஆண்டாகும். கிரெகொரியின் நாட்காட்டியில் இவை 1908, 1936, 1964, 1992, 2020, 2048, 2076, 2116 போன்றவை ஆகும்.[1] அல்லது, பழைய யூலியன் நாட்காட்டியில் 2004, 2032 போன்றவையாகும். திங்கட்கிழமையில், புதன்கிழமையில், அல்லது வியாழக்கிழமையில் தொடங்கும் எந்தவொரு நெட்டாண்டும் இரண்டு "13ம் தேதி வெள்ளிக்கிழமை"களைக் கொண்டிருக்கும் (மார்ச், நவம்பர் மாதங்களில்). அதே வேளையில், வியாழக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு இவ்வியல்பைக் கொண்டிருக்கும், ஆனாலும் மேலதிகமாக பெப்ரவரியிலும் "13ம் தேதி வெள்ளிக்கிழமை"யைக் கொண்டிருக்கும்.
நாட்காட்டிகள்
[தொகு]புதன்கிழமையில் தொடங்கும் ஒரு நெட்டாண்டின் நாட்காட்டி:
பொருந்தக்கூடிய ஆண்டுகள்
[தொகு]கிரெகொரியின் நாட்காட்டி
[தொகு]புதன்கிழமையில் தொடங்கும் நெட்டாண்டுகள், செவ்வாய்க்கிழமையில் துவங்கும் நெட்டாண்டுகள் போலவே, கிரெகொரியின் நாட்காட்டியின் 400 ஆண்டு சுழற்சியில் மொத்த நெட்டாண்டுகளில் கிட்டத்தட்ட 14.4% (97 இல் 14) என்ற விகிதத்தில் நிகழ்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்த நிகழ்வு 3.5% (400 இல் 14) ஆகும்.
தசாப்தங்கள் | 1-வது | 2-வது | 3-வது | 4-வது | 5-வது | 6-வது | 7-வது | 8-வது | 9-வது | 10-வது |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
17-ஆம் நூற்றாண்டு | 1620 | 1648 | 1676 | |||||||
18-ஆம் நூற்றாண்டு | 1716 | 1744 | 1772 | |||||||
19-ஆம் நூற்றாண்டு | 1812 | 1840 | 1868 | 1896 | ||||||
20-ஆம் நூற்றாண்டு | 1908 | 1936 | 1964 | 1992 | ||||||
21-ஆம் நூற்றாண்டு | 2020 | 2048 | 2076 | |||||||
22-ஆம் நூற்றாண்டு | 2116 | 2144 | 2172 | |||||||
23-ஆம் நூற்றாண்டு | 2212 | 2240 | 2268 | 2296 | ||||||
24-ஆம் நூற்றாண்டு | 2308 | 2336 | 2364 | 2392 | ||||||
25-ஆம் நூற்றாண்டு | 2420 | 2448 | 2476 | |||||||
26-ஆம் நூற்றாண்டு | 2516 | 2544 | 2572 |
யூலியன் நாட்காட்டி
[தொகு]அனைத்து நெட்டாண்டு வகைகளைப் போலவே, யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் தொடங்கும் சனவரி 1, 28 ஆண்டு சுழற்சியில் சரியாக ஒரு முறை நிகழ்கிறது, அதாவது 3.57% ஆண்டுகளில். யூலியன் காலண்டர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாவதால், அதாவது 700 ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது 25 சுழற்சிகளின் பின்னர்) இது மீண்டும் நிகழும்.
தசாப்தங்கள் | 1-வது | 2-வது | 3-வது | 4-வது | 5-வது | 6-வது | 7-வது | 8-வது | 9-வது | 10-வது |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
15-ஆம் நூற்றாண்டு | 1416 | 1444 | 1472 | 1500 | ||||||
16-ஆம் நூற்றாண்டு | 1528 | 1556 | 1584 | |||||||
17-ஆம் நூற்றாண்டு | 1612 | 1640 | 1668 | 1696 | ||||||
18-ஆம் நூற்றாண்டு | 1724 | 1752 | 1780 | |||||||
19-ஆம் நூற்றாண்டு | 1808 | 1836 | 1864 | 1892 | ||||||
20-ஆம் நூற்றாண்டு | 1920 | 1948 | 1976 | |||||||
21-ஆம் நூற்றாண்டு | 2004 | 2032 | 2060 | 2088 | ||||||
22-ஆம் நூற்றாண்டு | 2116 | 2144 | 2172 | 2200 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Robert van Gent (2017). "The Mathematics of the ISO 8601 Calendar". Utrecht University, Department of Mathematics. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
சாதாரண ஆண்டுகள் துவங்கும் நாட்கள்: | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | ஞாயிறு |
நெட்டாண்டுகள் துவங்கும் நாட்கள்: | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | ஞாயிறு |