பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா
பெர்லின் திரைப்பட விழா | |
---|---|
இடம் | பெர்லின். ஜெர்மனி |
நிறுவப்பட்டது | 1951 |
விருதுகள் | தங்கக் கரடி மற்றும் வெள்ளிக் கரடி |
பட எண்ணிக்கை | 395 (966 screenings) in 2012 |
இணையத் தளம் |
பெர்லின் திரைப்பட விழா (The Berlin International Film Festival) உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.[1] இத்திரைப்பட விழா ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறும்.[2] இத்திரைப்பட விழா மேற்கு ஜெர்மனியில் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.[3] ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடைபெறும். இதில் 3,00,000 நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு 5,00,000 பேர் பங்கு பெறுவர். இது உலகளவில் மிக அதிகமான மக்கள் பங்கு பெறும் திரைப்பட விழாவாகும்.[4] அதிகபட்சம் 400 திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் திரையிடப்படுகின்றன. இதில் 20 திரைப்படங்கள் தங்கக் கரடி மற்றும் வெள்ளிக் கரடி (Golden and Silver Bears) விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2001 ஆம் ஆண்டு முதல் டிய்ட்டர் கோஸ்ஸிலிக் (Dieter Kosslick) இத்திரைப்பட விழாவின் இயக்குனராக உள்ளார்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.hollywoodreporter.com/package/berlin-international-film-festival-0'
- ↑ China film wins top Berlin award, BBC News
- ↑ "Oscar Martay". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2014-05-20.
- ↑ Facts and Figures of the Berlinale, berlinale.com
- ↑ ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Dieter Kosslick , 18 பிப்ரவரி 2008
- ↑ Speed Interview with Dieter Kosslick Berlinale Chief பரணிடப்பட்டது 2018-09-29 at the வந்தவழி இயந்திரம், filmfestivalstv.com, 18 பிப்ரவரி 2008