உள்ளடக்கத்துக்குச் செல்

லூனா 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூனா 3 (Luna 3 அல்லது E-2A தொடர்) நிலாவை நோக்கி ஏவப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் மூன்றாவது விண்கலமாகும். இதற்கு முன்னர் பார்த்திடாத நிலவின் பகுதிகளைப் புகைப்படமெடுத்தது இவ்விண்கலம். இவ்விண்கலத்தின் வடிவம் நீள்வட்ட வடிவமாகும். 130 செ.மீ நீளமும் 120 செ.மீ விட்டமும் உடையது. இவ்விண்கலம் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தியதி ஏவப்பட்டது. இதன் எடை 278.5 கிலோகிராம் ஆகும். அக்டோபர் 6, 1959 அன்று நிலவுக்கு மிக அண்மையில் 6.200 கிலோமீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் எடுத்தது. நிலவின் மறுபுறத்தில் வடக்குத் தெற்காகப் புகைப்படமெடுத்து பூமிக்குத் திரும்பும் போது இதன் வட்டப்பாதை நிலவின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டது.[1][2] அக்டோபர் 7, 1959 அன்று 40 நிமிடங்களில் 29 புகைப்படங்களை இவ்விண்கலம் எடுத்தது.

இதையும் பார்க்கவும்

[தொகு]

லூனா 2

மேற்கோள்கள்

[தொகு]
  1. T. Eneev, E. Akim. "Mstislav Keldysh. Mechanics of the space flight". Keldysh Institute of Applied Mathematics (in ரஷியன்).
  2. Egorov, Vsevolod Alexandrovich (1957) "Specific problems of a flight to the Moon", Physics - Uspekhi, Vol. 63, No. 1a, pages 73–117. Egorov’s work is mentioned in: Boris V. Rauschenbakh, Michael Yu. Ovchinnikov, and Susan M. P. McKenna-Lawlor, Essential Spaceflight Dynamics and Magnetospherics (Dordrecht, Netherlands: Kluwer Academic Publishers, 2002), pages 146–147. (The latter reference is available on-line at: Google Books.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூனா_3&oldid=3850696" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy