உள்ளடக்கத்துக்குச் செல்

வழங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஒரு சர்வர் கணிணி

கணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே வழங்கி எனப்படுகிறது. தனிப்பட்ட வகையில் இதை பயன்படுத்தும் போது, இந்த வார்த்தை ஒரு சர்வர் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும். ஆனால் சேவை அளிப்பதற்கு பொருத்தமான ஏதாவது வகையிலான மென்பொருள் அல்லது பிரத்யேக வன்பொருளையே இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும்.

பயன்பாடு

[தொகு]

சர்வர் என்ற இந்த வார்த்தை பரவலாக தகவல் தொழில்நுட்ப துறையில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வன்பொருள், மென்பொருள் மற்றும்/அல்லது ஆப்ரேடிங் சிஸ்டங்களின் சர்வர் பதிப்புகள் போன்ற பல்வேறு விதமான சர்வர் பிராண்டு தயாரிப்புகள் இருந்த போதிலும், கருத்தளவில், ஒன்று அல்லது பல வாடிக்கையாளர்கள் (client) நிகழ்முறைகளைப் பகிர்ந்து கொள்ளும் எந்தவிதமான கணிணிமயப்பட்ட நிகழ்முறையும் ஒரு சர்வர் ஆகும். இதை விரிவாகக் கூறுவதானால், கோப்பு பகிர்க்ல்க்ல்ல்வை (file sharing) எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஒரு கணினியில் கோப்புகள் இருப்பதாலேயே மட்டும் அதை ஒரு சர்வர் என்று கூற முடியாது. ஆனால் அந்த கோப்புகளை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலமாக வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மெக்கானிசம் தான் சர்வர் ஆகும்.திபெச் தினெச்

அதே போல, மல்டிபிளாட்பார்ம் "அப்பாச்சி எச்டிடிபி சர்வர்" போன்ற ஒரு வெப் சர்வர் பயன்பாட்டை (web server application) எடுத்துகொள்வோம். இந்த வெப் சர்வர் மென்பொருளை எந்தவொரு பொருத்தமான கணினியிலும் செயல்படுத்தலாம் . உதாரணமாக, ஒரு மடிக்கணிணியோ அல்லது தனிநபர் பயன்பாட்டு கணினியோ (personal computer) பொதுவாக சர்வர் என்று குறிப்பிடப்படுவதில்லை. இவை இந்தச் சூழலில் ஒரு தனிநபரின் தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே உபயோகப்படுகின்றன என்பதால், அவ்வகையில் அவை தனிநபருக்கானவை என்று முத்திரை குத்தப்படுகின்றன. ஒரு வெப் சர்வராக உபயோகப்பட்டு வரும் கணினியைப் பொருத்த வரையில், அது பொதுவாக ஒரு சர்வர் என்று குறிப்பிடப்படுகிறது.

வன்பொருள் சார்ந்து பார்க்கும் போது, மென்பொருள் பயன்பாடுகளை அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரு வலையமைப்பு சூழலின் கீழ் இயக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட கணினி மாடல்கள் பொதுவாக சர்வர் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த கிளெயண்ட்-சர்வர் கான்பிக்ரேசன் சூழலில், அதாவது ஒரு கணிணி அல்லது பல கணினிகளுடனோ அல்லது ஒரு கணிணிமுறை சாதனத்துடனோ அல்லது பல சாதனங்களுடனோ இணைக்கப்பட்ட சூழலில், ஒன்றேயொன்று பிறவற்றிற்கு ஹோஸ்டாக (host) செயல்பட்டு பிறவற்றுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்.

எந்தவொரு தனிநபர் கணினியும் ஒரு சர்வராக செயல்பட முடியும் என்றாலும் கூட, செயல்பாட்டுச் சூழலை (production environment) அதிகரிக்க பிரத்யேகமான சர்வர் சில சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். அதாவது, வேகமான சிபியூ, மேம்பட்ட உயர்திறன் ரேம், அதிக கொள்ளளவு கொண்ட ஹாட்டுடிஸ்க் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும். அதாவது, வேகமான சிபியூ, மேம்பட்ட உயர்திறன் ரேம் (RAM), அதிக கொள்ளளவு கொண்ட ஹார்டு டிரைவ் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும். தனிநபர் கணினிக்கும், சர்வருக்கும் இடையில் சில முக்கிய வேறுபாடுகளைக் கூறுவதானால், பவர் சப்ளைகள், வலையமைப்பு இணைப்புகள் (network connections), சிலவேளைகளில் சர்வர்களே கூட ரிடண்டன்சியைக் கொண்டிருப்பதை முக்கிய வேறுபாடுகளாகக் கூறலாம்.

1990கள் மற்றும் 2000களுக்கு இடையில் பிரத்யேக வன்பொருட் களின் பயன்பாடு அதிகரித்ததால், பிரத்யேக சர்வர் பயன்பாடுகளும் அதிகரித்தன. அப்போது பிரபலப்பட்டவைகளில் ஒன்று தான், கூகுள் தேடுபொறி. இது கணினியோடு இணையாத வன்பொருள்கள் மற்றும் மென்பொருட்கள் இரண்டும் சேர்ந்த தொகுப்பாகும் இதற்கு எளிமையான உதாரணங்களாக சுவிட்சுகள், ரௌட்டர்கள், கேட்வேக்கள் மற்றும் பிரிண்ட் சர்வர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம், இவை எல்லாமே பிளக்-அண்டு-பிளே கான்பிக்ரேசன் முறையில் அமைந்திருக்கின்றன.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் அல்லது லினக்ஸ் பதிப்புகள் போன்ற நவீன இயங்குதளங்கள், கிளெயண்ட்-சர்வர் கட்டமைப்பை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கணினி சாதனங்களுடன் பல்வேறு மென்பொருள்கள் இணைந்து செயல்படும் வகையில், இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் வன்பொருள்களைக் குறைக்க முயற்சிக்கின்றன. ஒரு வகையில், ஆப்ரேட்டிங் சிஸ்டமே மென்பொருளுக்கான ஹார்டுவேராக செயல்பட முனைகிறது, ஆனால் குறைமட்ட புரோகிராமிங் மொழிகள், ஏபிஐ (API) பயன்படுத்தி செயல்படுகின்றன.

இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள், சர்வீஸ்கள் அல்லது டேமன்கள் என்றழைக்கப்படும் பின்புல நிரல்களைச் (background programs) செயல்படுத்தும் அளவிற்கு திறன் பெற்றிருக்கின்றன. இந்த நிரல்கள், மேலே அப்பாச்சி எச்டிடிபி சர்வர் மென்பொருள் குறிப்பிடப்பட்டது போல, செயல்படுவதற்கான அவற்றின் தேவை வரும் வரை உறைநிலையில் (sleep state) காத்திருக்கின்றன. சர்வீஸ்களை வழங்கும் எந்த மென்பொருளும் சர்வர் என்றழைக்கப்படுவதால் , நவீன தனிநபர் பயன்பாட்டு கணிணிகள் ஒரேசமயத்தில் செயல்படும் சர்வர்-கிளெயண்ட்களின் காட்டைப் போல காணப்படுகின்றன.

இறுதியாக, இணையமே கூட சர்வர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஒரு காடாக தான் இருக்கிறது. ஒரு சில வரைமுறைப்படுத்தப்பட்ட ஸ்டேக் புரோட்டோகால்களின் வரிசைக்கு பொருந்தி வரும்பட்சத்தில், பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வெறுமனே ஒரு வலைத்தளத்தைத் தட்டினால், அதில் கூட உதாரணமாக எத்தனையோ வன்பொருள் மற்றும் மென்பொருள் சர்வர்கள் உள்ளடங்கி வருகின்றன. நமக்கு தேவையான உலகளாவிய இணையத்தை வழங்க குறைந்தபட்சம் ரௌட்டர்கள், மோடம்கள், டொமைன் நேம் சர்வர்கள் மற்றும் இன்னும் பல்வெறு சர்வர்கள் தேவைப்படுகின்றன.

சர்வர் வன்பொருள்

[தொகு]
ஒரு சர்வர் அலமாரியின் பின்புறம்

சர்வர் பயன்பாட்டைச் சார்ந்து, சர்வர்களுக்கான வன்பொருள் தேவைகள் மாறுபடுகின்றன. பொதுவாக ஒரு மேஜை கணிணிக்கு தேவைப்படும் சிபியூ வேகத்தை விட சர்வருக்கு அதிகளவிலான வேகம் தேவைப்படுகிறது. ஒரு வலையமைப்பில் இருக்கும் பல பயனர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க சர்வர்களுக்கு, வேகமான வலையமைப்பு இணைப்புகள் மற்றும் உயர்ந்தளவிலான இன்புட்/அவுட்புட் வெளியீடுகள் போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன. பொதுவாக சர்வர்கள் ஒரு வலையமைப்பிற்குள் பயன்படுத்தப்படுவதால், ஒரு மானிட்டரோ அல்லது இன்புட் சாதனமோ இல்லாமல் தலையில்லா நிலையில் (headless mode) அவை செயல்படுத்தப்படலாம். சர்வர் செயல்பாட்டிற்கு தேவையில்லாத செயல்முறைகள் பயன்படுத்தப்படுவதில்லை. பயனர் வரைநிலை இடைமுகம் (Graphical user interface - GUI) தேவையில்லை என்பதாலும், அது வேறிடத்திற்கு ஒதுக்கக்கூடிய ஆதாரங்களை இழுத்துவிடும் என்பதாலும், பல சர்வர்கள் பயனர் வரைநிலை இடைமுகத்தைக் கொண்டிருப்பதில்லை. அதே போல ஆடியோ மற்றும் யூஎஸ்பி (USB) இடைமுகங்களும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

பொதுவாக சர்வர்கள் தடையில்லாமல் நீண்ட நேரம் செயல்பட வேண்டும் என்பதாலும், அவற்றின் செயல்பாடு கட்டாயம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதாலும் சிறந்த மற்றும் நீடித்த வன்பொருள்களின் தேவை அதிஅவசியமாகிறது. வர்த்தக கணினி பாகங்களில் இருந்து தான் சர்வர்கள் உருவாக்கப்படுகின்றன என்றாலும், பழுது ஏற்படாமல் நீடித்த உழைப்பிற்காக மிக முக்கியமான சர்வர்களுக்கு பிரத்யேக சிறப்பு வன்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, வேகமான உயர்திறன் ஹார்டுடிஸ்குகள், வெப்பத்தை வெளியேற்ற பெரிய உள்விசிறிகள் (computer fans) அல்லது நீர்குளிர்விப்பு முறை (water cooling), மின்தடையின் போதும் சர்வரின் செயல்பாடு தடையில்லாமல் செயல்பட தடையற்ற மின் விநியோக கருவிகள் போன்றவை சர்வர்களில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சாதனங்கள் முறையே விலைக்கேற்ப உயர்ந்த திறனையும், நம்பகத்தன்மையையும் அளிக்கின்றன. வன்பொருள் ரிடன்டன்சி (ஒன்று பழுதானால், தானாகவே மற்றொன்று அதன் பணியைச் செய்யும் வகையில் பவர்சப்ளைகள் மற்றும் ஹார்டுடிஸ்குகள் போன்ற சாதனங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இணைக்கப்பட்டிருப்பது) பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பழுதுகளைக் கண்டறிந்து, சரிப்படுத்தும் ஈசிசி நினைவக சாதனங்களும் (ECC memory devices) பயன்படுத்தப்படுகின்றன; ஈசிசி அல்லாத நினைவகம் (non-ECC memory) தரவு இழப்புகளை (data loss) ஏற்படுத்தக்கூடும்.

பெரும்பாலும் பாதுகாப்பிற்காக யாரும் அணுகாதபடி, அலமாரியில் வைத்திருக்கும் வகையில், சர்வர் அறைகளில் தான் சர்வர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

பெரும்பாலான சர்வர்கள் தொடங்கும் போதும், ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை லோட் செய்யும் போதும் வன்பொருள்களுக்காக நீண்ட நேரம் எடுக்கும். அதேபோல, பெரும்பாலும் பூட் ஆவதற்கு முன்னாலேயே சர்வர்கள் நினைவக சோதனையையும், அங்கீகரிப்பையும் (memory test & verification) செய்யும், அதனோடு ரீமோட் மேனேஜ்மென்ட் சர்வீஸ்களையும் (remote management services) தொடங்கிவிடும். பிறகு ஹார்டு டிரைவ் கண்ட்ரோலர்கள், எல்லா டிரைவுகளையும் ஒரேநேரத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வராமல், தொடக்க மின்இழுப்புகளால் (startup surges) பவர்சப்ளை ஓவர்லோடு ஆகாமல் இருக்க, படிப்படியாக டிரைவ்களைச் செயல்பாட்டிற்கு கொண்டுவரும். அதன்பிறகு ரிடன்டன்சி சரியாக செயல்படுவதற்காக முன்கூட்டிய ரேய்டு (RAID) சிஸ்ட சோதனைகளை முடக்கிவிடும். ஒரு சர்வர் தொடங்கும் போது பல நிமிடங்கள் எடுத்து கொள்வது பொதுவான விஷயம் தான், அதேசமயம் அவற்றை பல மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்கு ரீஸ்டார்டு (restart) செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.

சர்வர் ஆப்ரேட்டிங் சிஸ்டம்

[தொகு]

FreeBSD, சோலாரிஸ் மற்றும் லினக்ஸ் போன்ற சர்வர்களுக்கான சில பிரபல ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் யூனிக்ஸை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன அல்லது அதற்கு இணையானவையாக இருக்கின்றன. அடிப்படையில் யூனிக்ஸ் ஒரு மினிகம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங் சிஸ்டமாகும், படிப்படியாக சர்வர்கள் முந்தைய மினிகம்ப்யூட்டர்களுக்கு மாற்றாக அவ்விடத்தைப் பிடித்தன, யூனிக்ஸ் அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைத் தேர்வு செய்வதில், யூனிக்ஸ் ஒரு சிறந்த மற்றும் லாஜிக்கலான தேர்வாக பிரபலமாகி இருந்தது. இவற்றில் பல இரண்டு விதத்திலும் சுதந்திரத்தை அளித்தது.

சர்வர் அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் பொதுவாக சில வசதிகளைக் கொண்டிருக்கும், இந்த வசதிகள் அவற்றை சர்வர் சூழலுக்கு மேலும் பொருத்தமாக்குகின்றன. அவற்றில் சில,

  • ஜியுஐ (GUI) வசதி இருக்காது அல்லது வேண்டுமானால் ஏற்படுத்தலாம்
  • ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ரீஸ்டார்டு செய்யாமலேயே வன்பொருள் அல்லது மென்பொருள் இரண்டையும் மேம்படுத்தலாம், ரீகான்பிக்யூர் (reconfigure) செய்யலாம்,
  • முக்கிய தரவுகளை இணையத்தில் அடிக்கடி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பேக்அப் எடுக்கும் அதிநவீன வசதி,
  • வெவ்வேறு வால்யூம்களுக்கு அல்லது சாதனங்களுக்கு இடையில் தரவுகளைத் தடையில்லாமல் பகிர்ந்து கொள்ளலாம்,
  • இலகுவான மற்றும் நவீன வலையமைப்பு திறன்கள்,
  • யூனிக்ஸில் டேமன்கள், விண்டோஸில் சர்வீஸ்கள் போன்ற தானியங்கி திறன்கள், மற்றும்
  • பயனர், ஆதாரங்கள் (resource), தரவு மற்றும் நினைவகத்திற்கான நவீன பாதுகாப்புடன் கூடிய வலுவான சிஸ்டம் பாதுகாப்பு.

சர்வர் அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் பல சமயங்களில் வன்பொருள் சென்சார்களுடன் தொடர்பு கொள்வனவாக இருக்கும், இதன்மூலம் இது அதிக வெப்பம், புரோஸசர் மற்றும் டிஸ்க் பழுது போன்றவற்றைக் கண்டறிந்து, ஆப்ரேட்டருக்கும் அறிவிக்கும் அல்லது/அத்துடன் அதுவாகவே மாற்று நடவடிக்கைகளையும் எடுக்கும்.

ஒரு மேஜை கணினி (desktop computer) அதன் பயனருக்குத் தேவையான பரந்த செயல்பாடுகளைச் செயல்படுத்த வேண்டியதிருக்கும் நிலையில், சர்வர்கள் பல பயனர்களுக்கு வரையறுக்கப்பட்ட சர்வீஸ்களை மட்டுமே அளிக்க வேண்டியதிருக்கும், அதேபோல மேஜை கணினியில் பயன்படுத்தப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தேவைகளுக்கும், சர்வரில் பயன்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தேவைகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றன. சர்வீஸ்கள் அளிப்பதற்கும் மற்றும் பயனர்களின் தேவையை விரைவில் பூர்த்தி செய்வதற்கும் இரண்டிற்கும் ஒரு கணினியைப் பயன்படுத்த ஓர் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தால் சாத்தியப்படும் என்றாலும், வழக்கமாக சர்வர்களிலும், மேஜை கணினிகளிலும் வேறுவேறு ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் ஒரேவிதமான பயனர் இடைமுகத்துடன் சர்வர் மற்றும் மேஜை கணிணி இரண்டிற்கும் இரண்டு பதிப்புகளை வழங்குகின்றன.

z/OS போன்ற சில முக்கிய மெயின்பிரேம் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களைப் போல விண்டோஸ் மற்றும் மேக் OS X ஆப்ரேட்டிங் சிஸ்டங்களின் டெஸ்க்டாப் பதிப்புகள் வெகு சில சர்வர்களில் மட்டும் தான் நிறுவப்பட்டிருக்கின்றன. யூனிக்ஸ் மற்றும் கட்டற்ற கெர்னல் அமைப்புகளின் ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் தான் சர்வர்களை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கின்றன.[மேற்கோள் தேவை]

மைக்ரோபுரோஸசர் அடிப்படையிலான சர்வர்களின் அதிகரிப்பு, x86 மைக்ரோபுரோஸசர் கட்டமைப்பில் செயல்படுத்துவதற்கான யூனிக்ஸின் அபிவிருத்திக்கு வித்திட்டது. ஆப்ரேட்டிங் சிஸ்டங்களுக்கான மைக்ரோசாப்ட் விண்டோஸ் குடும்பமும் x86 ஹார்டுவேரில் செயல்படுகிறது, மேலும் சர்வர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் விண்டோஸ் என்டி (NT) பதிப்புகளும் இருக்கின்றன.

சர்வர் மற்றும் டெஸ்க்டாப் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களின் செயல்பாடுகள் வேறுவேறாக இருந்தாலும், வன்பொருள்கள் மற்றும் இயங்குதளங்களின் நம்பகத்தன்மையில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகள் இந்த இரண்டு வகையான ஆப்ரேட்டிங் சிஸ்டங்களுக்கு இடையிலான வித்தியாசத்தைக் குறைத்துவிட்டிருக்கின்றன. இன்று, பல டெஸ்க்டாப் மற்றும் சர்வர் ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் ஒரேமாதிரியான கோட்களின் அடிப்படைகளைப் பகிர்ந்து கொள்கின்றன, கான்பிக்ரேஷனில் மட்டுமே வேறுபடுகின்றன. இணைய பயன்பாடுகள் (web application) மற்றும் மிட்டில்வேர் பிளாட்பார்ம்களில் (middleware platforms) ஏற்பட்டிருக்கும் மாற்றமும் சிறப்பு பயன்பாடுகள் நிறுவப்பட்ட சர்வர்களின் தேவையைக் குறைத்துவிட்டிருக்கிறது.

இணையத்தில் சர்வர்கள்

[தொகு]

இணையத்தின் மொத்த கட்டமைப்பும் பெரும்பாலும் கிளெயண்ட்-சர்வர் மாதிரியில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. உயர்மட்ட ரூட் நேம்சர்வர்கள் (High-level root nameservers), டிஎன்எஸ் (DNS) சர்வர்கள் மற்றும் ரௌட்டர்கள் இணையத்தில் தரவு பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. உலகமெங்கும் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும் மில்லியன்கணக்கிலான சர்வர்கள் இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இணைய சர்வர்கள் அளிக்கும் பல சேவைகளில் சில:

  • உலகளாவிய வலையம்
  • டொமைன் நேம் சிஸ்டம் (Domain Name System)
  • மின்னஞ்சல்
  • எப்டிபி பைல் டிரான்ஸ்பர் (FTP File Transfer)
  • சேட்டிங் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜிங் (chat and instant messaging)
  • வாய்ஸ் கம்யூனிகேசன்
  • ஆடியோ மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங்
  • ஆன்லைன் கேமிங்

வெளிப்படையாக, ஒரு சாதாரண இணைய பயனர் ஒரு செயல்பாட்டைச் செய்யும் போது, ஒரு சர்வர் உடனோ அல்லது பல சர்வர்களுடனோ ஒன்றோ அல்லது பல தொடர்புகளையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

சர்வர்களுக்கு இடையிலான மட்டத்தில் செயல்படும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. சில சேவைகள் பிரத்யேக சர்வர்களைப் பயன்படுத்துவதில்லை; உதாரணமாக, பியர்-டு-பியர் கோப்பு பகிர்வுமுறை (peer-to-peer file sharing), தொலைபேசி சேவை (உதாரணமாக ஸ்கைப்), பல பயனர்களுக்கு வழங்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (உதாரணமாக, கொண்டிகி, ஸ்லிங்பாக்ஸ்) ஆகியவை.

தினசரி வாழ்க்கையில் சர்வர்கள்

[தொகு]

ஏதோவொரு கணினியோ அல்லது சாதனமோ பயன்பாடுகளை அல்லது சேவைகளை அளிக்கிறது என்றால் அது தொழில்நுட்ப முறையில் ஒரு சர்வர் என்றழைக்கப்படுகிறது. ஓர் அலுவலகத்திலோ அல்லது பெருநிறுவன சூழலிலோ வலையமைப்பு சர்வரை எளிதாக கண்டறிய முடியும். ஒரு டிஎஸ்எல்/கேபிள் மோடம் ரௌட்டரானது, ஐபி முகவரி அசைன்மெண்ட் (DHCP வழியாக) மற்றும் நேட் NAT போன்ற பயன்பாட்டு சேவைகளுடன் ஒரு கணினியை இணைப்பதால், அது ஒரு சர்வருக்கான தகுதியைப் பெறுகிறது, இது வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து கணினியைப் பாதுகாக்க பயர்வாலாக (firewall) செயல்படுகிறது.[மேற்கோள் தேவை] ஐட்யூன்ஸ் என்பது கணினிகளுக்கு இடையில் இசையை ஸ்ட்ரீம் செய்ய ஒரு மியூசிக் சர்வராகச் செயல்படுகிறது. பல வீட்டு பயனர்கள் (home users) போல்டர்களையும் (folders), பிரிண்டரையும் பகிர்ந்து கொள்கிறார்கள். எவர்குவஸ்ட் (Everquest), வோல்ட் ஆப் வார்கிராப்ட் (World of Warcraft), கவுண்டர்-ஸ்ட்ரைக் (Counter-Strike) மற்றும் ஈவ்-ஆன்லைன் (EVE-Online) போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை நிறுவும் பல சர்வர்களும் மற்றொரு உதாரணமாக இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழங்கி&oldid=3764017" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy