உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய போர்னியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  பிரித்தானிய போர்னியோ
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு.

பிரித்தானிய போர்னியோ (ஆங்கிலம்: British Borneo; மலாய் மொழி: Borneo British சீனம்: 英屬婆羅洲; இடச்சு மொழி: Brits-Borneo); என்பது போர்னியோ தீவில் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த நான்கு நிலப்பகுதிகளின் அழைப்புப் பெயராகும்.[1]

1841-ஆம் ஆண்டு தொடங்கி 1984-ஆம் ஆண்டு வரை 143 ஆண்டுகளுக்கு, புரூணை; சபா; சரவாக்; லபுவான் ஆகிய நிலப்பகுதிகளை பிரித்தானியர்கள் தங்களின் ஆளுமைக் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.[2]

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், 1946-ஆம் ஆண்டில் இருந்து, 1963-ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெறும் வரையில், சரவாக் மாநிலம் பிரித்தானியப் பேரரசின் முடியாட்சி காலனியாக (Crown Colony of Sarawak) இருந்தது.[3]

அத்துடன் லபுவான் பிரதேசம், 16-ஆம் நூற்றாண்டில் இருந்து 19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கக் காலம் வரையில், புரூணை பேரரசின் (Brunei Sultanate) பிரதேசமாக இருந்தது.

1846 திசம்பர் 18-ஆம் தேதி, புரூணையின் சுல்தான் சார்பில் உமார் அலி சைபுதீன் II (Omar Ali Saifuddin II) எனும் புரூணை அரசப் பிரதிநிதி, லபுவான் ஒப்பந்தத்தில் (Treaty of Labuan) கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாக லபுவான் பிரதேசம், ஐக்கிய இராச்சியத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.[4]

பொது

[தொகு]
1846 திசம்பர் 18-ஆம் தேதி புரூணை அரண்மனையில் கையெழுத்தான லபுவான் ஒப்பந்தம்
1846 திசம்பர் 24-ஆம் தேதி லபுவான் தீவில் பிரித்தானிய கொடி ஏற்றப்பட்டது.

1848-ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் ஒரு நேரடி காலனியாக லபுவான் நிறுவப்பட்டது. அந்த வகையில் லபுவான் பிரதேசம், போர்னியோவின் ஆரம்பகால பிரித்தானிய காலனி என்றும் அறியப்படுகிறது.[5]

போர்னியோவில் இரண்டாம் உலகப் போருக்கு முன், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது (British Colonial Rule), சரவாக் மாநிலம் என்பது சரவாக் இராச்சியம் (Raj of Sarawak) என்று அழைக்கப்பட்டது. சரவாக் இராச்சியத்தின் வெள்ளை இராசாக்கள் 1841-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை சரவாக் மாநிலத்தை, 105 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.

அதன் பின்னர் 1848-ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் ஒரு நேரடி காலனியாக லபுவான் நிறுவப்பட்டது. அந்த வகையில் லபுவான் பிரதேசம், போர்னியோவின் ஆரம்பகால பிரித்தானிய காலனி என்றும் அறியப்படுகிறது.[6]

போர்னியோவில் இரண்டாம் உலகப் போருக்கு முன், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது (British Colonial Rule), சரவாக் மாநிலம் என்பது சரவாக் இராச்சியம் (Raj of Sarawak) என்று அழைக்கப்பட்டது. சரவாக் இராச்சியத்தின் வெள்ளை இராசாக்கள் 1841-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை சரவாக் மாநிலத்தை, 105 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.

பிரித்தானிய வடக்கு போர்னியோ

[தொகு]

1840-களில் சபா மாநிலம், பிரித்தானிய வடக்கு போர்னியோ (North Borneo) என்று அழைக்கப்பட்டது. 1881-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை, 65 ஆண்டுகள், சபா மாநிலத்தை பிரித்தானியப் பேரரசின் முடியாட்சி காலனி என பிரித்தானியர்கள் ஆட்சி செய்தார்கள்.

லபுவான் தீவு

[தொகு]

லபுவான் தீவு என்பது லபுவான் முடியாட்சி காலனி (Crown Colony of Labuan) என்று அழைக்கப்பட்டது. 1848-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை 98 ஆண்டுகள் லபுவான் பிரதேசத்தை பிரித்தானியர்கள் ஆட்சி செய்து உள்ளார்கள்.

புரூணை இராச்சியம்

[தொகு]

1888 செப்டம்பர் 17-ஆம் தேதி, புரூணை இராச்சியத்திற்கும் (Kingdom of Brunei) பிரித்தானியப் பேரரசிற்கும் இடையே ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் பெயர் பாதுகாப்பு உடன்படிக்கை 1888 (Treaty of Protection 1888).

அந்த உடன்படிக்கைக்குப் பின்னர், 1984-ஆம் ஆண்டு தன்னாட்சி பெறும் வரையில் புரூணை இராச்சியம், ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பில் (Protectorate of the United Kingdom) இருந்து வந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. W. H. (William Hood) Treacher, Sir (December 2012). British Borneo Sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo. Tredition Classics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8472-1906-4.
  2. Leigh R. Wright (1 July 1988). The Origins of British Borneo. Hong Kong University Press. pp. 181–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-962-209-213-6.
  3. George Lawrence Harris (1956). North Borneo, Brunei, Sarawak (British Borneo). Human Relations Area Files.
  4. Mundy, Rodney (1848). Narrative of Events in Borneo and Celebes, down to the Occupation of Labuan: from the Journals of James Brooke, Esq. Vol. 1. John Murray.
  5. Tarling, Nicholas (1990). Brunei: Political, Commercial, and Social History (Volume 2 ed.). Brunei Times. p. 84. {{cite book}}: |access-date= requires |url= (help)
  6. Tarling, Nicholas (1990). Brunei: Political, Commercial, and Social History (Volume 2 ed.). Brunei Times. p. 84. {{cite book}}: |access-date= requires |url= (help)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானிய_போர்னியோ&oldid=3652795" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy