1944
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1944 (MCMXLIV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 15 - ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- மே 5 - மகாத்மா காந்தி சிறையில் இருந்து விடுதலையானர்.
- ஜூன் 10 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் பெண்கள், குழந்தைகள் உட்பட 642 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 17 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
- ஜூலை 3 - சோவியத் இராணுவத்தினர் மின்ஸ்க்கை விடுவித்தனர்.
- ஜூலை 4 - ஆன் பிராங்க் குடும்பம் நாசி படைகளால் கைது செய்யப்பட்டார்கள்.
பிறப்புகள்
[தொகு]- ஜனவரி 1 - உமர் அல்-பஷீர், சூடான் அரசுத்தலைவர்
- ஜனவரி 12 - ஜோ பிரேசியர், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் (இ. 2011)
- ஏப்ரல் 7 - கெர்ஃகாத் சுரோடர், செருமனியின் முன்னாள் அரசுத்தலைவர்
- மே 1 - சுரேஷ் கல்மாடி, இந்திய அரசியல்வாதி
- மே 14 - ஜோர்ச் லூகாஸ், அமெரிக்க இயக்குனர்
- ஜூன் 13 - பான் கி மூன், தென்கொரிய அரசியல்வாதி, ஐநா செயலர்
- சூலை 10 - கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (இ. 2014)
- சூலை 13 - ஏர்னோ ரூபிக், அங்கேரியக் கண்டுபிடிப்பாளர்
- செப்டம்பர் 17 - ரைன்ஹோல்ட் மெஸ்னெர், இத்தாலிய மலையேறி
இறப்புகள்
[தொகு]- ஜனவரி 23 - எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (பி. 1863)
- செப்டம்பர் 11 - நூர் இனாயத் கான், இந்திய இளவரசி (பி. 1914)
- அக்டோபர் 14 - இர்வின் ரோமெல், செருமானிய இராணுவத் தளபதி (பி. 1891)
- நவம்பர் 5 - அலெக்சிஸ் காரெல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர் (பி. 1873)
- டிசம்பர் 13 - வசீலி கண்டீன்ஸ்கி, உருசியக் கலைஞர் (பி. 1866)
- டிசம்பர் 30 - ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1866)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - ஐசிடோர் ஐசாக் றாபி
- வேதியியல் - ஓட்டோ ஹான்
- மருத்துவம் - ஜோசப் ஏர்லாங்கர், ஹேர்பேர்ட் ஸ்பென்செர் காஸ்ஸர்
- இலக்கியம் - ஜொஹான்னஸ் ஜென்சென்
- அமைதி - செஞ்சிலுவைச் சங்கம்