Tea for you
Caught in the sugar
You profusely made
This ant might have died
Now in the tea that you are refusing to drink you
Find it's body
If commanded to drink after removing it
You might pay for it and leave angrily without drinking it
If a friend makes a fun that your eyesight will become better
You might take and drink it
If not so and instead a new tea is served to you it means
More tea is manufactured for you
உங்களுக்கான தேநீர் - யவனிகா ஸ்ரீராம்
நீங்கள் அதிகம் தயாரித்த
சர்க்கரையில் சிக்கி
இவ்வெறும்பு மரணமுற்றிருக்க வேண்டும்
இப்போது நீங்கள்
மறுத்துக்கொண்டிருக்கும் தேநீரில்
அதன் உடலைக் காண்கிறீர்கள்
எடுத்துவிட்டு அருந்துமாறு கட்டளை வரும்போது
நீங்கள் கோபத்துடன் சுவைக்காமல்
கட்டணம் கட்டி வெளியேறலாம்
இல்லை நன்றாகக் கண் தெரியுமென
நண்பர் தமாஷ் செய்யும்போது
எடுத்து வீசிவிட்டு குடித்தும் வைக்கலாம்
அப்படியில்லாமல்
உங்களுக்குப் புதிய தேநீர் தரப்படுமெனில்
உங்களுக்காக அதிகம் தேநீர் தயாரிக்கப்படுகிறது
கவிதை நூல்: யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
கவிஞர்
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem